ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் பார்வதி நாயர்.. ஜூன் மாதம் ரிலீஸ்!

சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் இளம் கதாநாயகியாக திகழ்பவர் பார்வதி நாயர். இளம் நெஞ்சங்களை கொள்ளை கொள்ளும் அழகால் கிறங்கடிக்கும் நடிகை பார்வதி நாயர் தன் திரைவாழ்வில் மிகச்சவாலான பாத்திரத்தில் நடிப்பதில் பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறார்.

Kaho na pyar hai, Pardes, Taal ஆகிய பாலிவுட் மெகாஹிட் படங்களின் ஒளிப்பதிவாளர் கபிர் லால் ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் , பார்வதி நாயருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

தமிழில் உன் பார்வையில்

தமிழில் உன் பார்வையில்

ஸ்பானிஷ் மொழியில் வெளியாகி பல ரசிகர்களை கவர்ந்த "Julia Eyes" படத்தின் மறு ஆக்கம் தான் இந்த படம். தமிழில் "உன் பார்வையில்" என பெயரிடபட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மராத்தி, பெங்காலி என மொத்தம் 4 மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.

கற்பனையே செய்திராத

கற்பனையே செய்திராத

அழகு தேவதை நடிகை பார்வதி நாயர் இறுதியாக தன் நடிப்புக்கு சவால் தரும் கனவு கதாப்பாத்திரத்தில், இயக்குநர் கபீர் லால் அறிமுக இயக்கத்தில் உருவாகும் "உன் பார்வையில்" படத்தில் நடித்துவருகிறார். அவர் கற்பனையே செய்திராத வகையில் இப்படத்தில் இரட்டை கதாப்பாத்திரத்தில் நடித்துவருகிறார்.

பெரும் உற்சாகத்தில்

பெரும் உற்சாகத்தில்

இப்படத்தில் தன் சகோதரியை கொலை செய்தவரை தேடும் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார். பழிவாங்கும் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மிக அழுத்தமானதொரு கதாப்பாத்திரத்தில் நடித்து வருவதில் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.

சாகசமான பாத்திரத்தில் நடிப்பது

சாகசமான பாத்திரத்தில் நடிப்பது

படம் குறித்து நடிகை பார்வதி நாயர் கூறும்போது.. மிகச்சிறந்த படங்களின் ஒளிப்பதிவாளர் கபீர் லால் அவர்களின் முதல் இயக்கத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. திரைப்படம் பற்றி மிகப்பெரும் தெளிவான பார்வை அவரிடம் உள்ளது. படம் மிகச்சிறப்பாக வரும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது. அதிலும் இரட்டை வேடம், நாயகியை மையப்படுத்தி மிக சவாலான, அழுத்தமான பாத்திரம் செய்வது பெரும் பாக்கியம். தென்னிந்திய சினிமாவில் பெண் கதாப்பத்திரத்தை மையப்படுத்திய படம், நல்ல தயாரிப்பு நிறுவனத்தில் நல்ல இயக்குநரின் இயக்கத்தில் உருவாவது மிகவும் அரிது. இரட்டை வேடம் இது வரை நான் செய்திராத ஒன்று, எனக்கு மிகவும் புதிய அனுபவம். முதன்மை நாயகியாக, சாகசமான பாத்திரத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம்.

தொழிலதிபராக

தொழிலதிபராக

கணேஷ் வெங்கட்ராம் படத்தில் நாயகி பார்வதி நாயரின் கணவராக சைக்காலஜி மருத்துவராக முக்கியமானதொரு பாத்திரத்தில் நடிக்கிறார். பார்வதி நாயர் இப்படத்தில் ஒரு தொழிலதிபராக நடிக்கிறார். இருவருக்குமான கெமிஸ்ட்ரி படத்தில் மிக அழகாக வந்துள்ளது. கணேஷ் குறித்து கூறும்போது, கணேஷ் ஒரு மிக அற்புதமான நடிகர் மேலும் மிகச்சிறப்பான ஒத்துழைப்பு தருபவர். ஒவ்வொரு காட்சியும் வெகு சிறப்பாக வரவேண்டுமென விரும்புவார். இயக்குநர் கபீர் அவர்கள் ஒவ்வொரு காட்சியையும் அமைக்கும் விதம் அதை படமாக்கும் விதம் பிரமிப்பாகவுள்ளது.

முழுவீச்சில் படப்பிடிப்பு

முழுவீச்சில் படப்பிடிப்பு

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது டேராடூன், உத்ராகண்ட் பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
Lovely World Production சார்பில் அஜய் சிங் தயாரிக்கும் இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X