தொடரும் பிசியோ, எக்மோ சிகிச்சை.. எஸ். பி. பாலசுப்ரமணியம் உடல் நிலை எப்படி இருக்கு?
சென்னை: ஒட்டுமொத்த தமிழ் மக்களின் தொடர் பிரார்த்தனை எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை மீண்டும் நம்மிடையே கொண்டு வந்து சேர்க்கும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
அபாய கட்டத்தை எல்லாம் தாண்டி உள்ள அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் இன்றைய ஹெல்த் அப்டேட்டை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

கொடிய கொரோனா
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக, சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் மீண்டு விட்டார் என்ற சந்தோஷ தகவல் ரசிகர்களை தைரியப்படுத்தியது.

தொடரும் சிகிச்சை
கொரோனாவில் இருந்து மீண்டாளும் உடல் நலக் குறைபாடு காரணமாக அவருக்கு தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை மற்றும் எக்மோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என அவரது மகன் எஸ்.பி.பி. சரண் இன்றைய ஹெல்த் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். பாடு நிலா பாலுவின் உடல் நிலை சீராக உள்ள செய்தியை அறிந்த ரசிகர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

சீக்கிரமே
மேலும், சீக்கிரமே இந்த பிசியோ மற்றும் எக்மோ சிகிச்சை கூட அப்பாவுக்கு தேவைப்படாது என நம்புகிறோம். அவர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கும் சரணின் வரிகள் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையும் ஒளியையும் கொடுத்துள்ளது.

ஒரே வேண்டுதல்
பாலசுப்ரமணியத்தின் ரசிகர்களின் ஒரே வேண்டுதல் மற்றும் கோரிக்கை அவர் சீக்கிரமே குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்பதும், மீண்டும் மைக்கை பிடித்து பாட வேண்டும் என்பது மட்டும் தான். சரணின் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள், அப்பா சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவார் என்கிற நம்பிக்கை கமெண்ட்டுகள் ஆறுதல் தருகின்றன.


Click it and Unblock the Notifications











