எஸ்.பி.பி சரணின் “அதிகாரம்“.. புதிய இணையத் தொடர்

சென்னை : எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் மகனும் பின்னணிப் பாடகருமான எஸ்.பி.பி.சரண் அதிகாரம் என்ற புதிய இணையத்தொடரை தயாரித்து இயக்க உள்ளார்.

தேசிய விருது வென்ற 'ஆரண்யகாண்டம்' மற்றும் நாணயம், சென்னை 28, திருடன் போலீஸ் ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ், 'அதிகாரம்' மூலம் முதன் முறையாக இணையத் தொடர் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இதற்கான படப்பிடிப்பை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

 SPB Charans Adhigaram New web series

எஸ்.பி. சரண் முதன் முறையாக இந்த இணையத் தொடரைத் தயாரித்து, இயக்குகிறார். அன்பும் அதிகாரமும் எதிர்மறை விகிதாச்சார இயல்புடையதாக இருக்க, 'அதிகாரம்' அரசியலை மையமாகக் கொண்ட ஒரு பரபரப்பான கதைகளத்துடன் இத்தொடர் தயாராகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள ஒரு பக்கம் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, அவர்களை வீழ்த்தி அதிகாரத்தை அடையத் துடிக்கும் சாதாரண இளைஞன் ஒருவனைப் பற்றிய கதை.

 SPB Charans Adhigaram New web series

தேசிய அளவில் முதல் முறையாக சமகால அரசியலையும், அதன் போக்கையும் மிகத் தீவிரமாய் பேசப்போகிறது அதிகாரம் என்கிறார் இத்தொடரின் ஆக்கம் எழுத்து மற்றும் வசன கர்த்தாவாகிய கேபிள் சங்கர்.

இத்தொடரில் 'வெள்ளைப்பூக்கள்'தேவ், ஏ.எல்.அழகப்பன், இளவரசு, 'பிக்பாஸ்' புகழ் அபிராமி, ஜான் விஜய், அரவிந்த் ஆகாஷ், வினோதினி வைத்யநாதன், 'சூது கவ்வும்' சிவகுமார், கஜராஜ், ராஜேஷ், வின், வினோ ஆகியோர் நடிக்கிறார்கள்.

ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக் கவனிக்க, இசை தீனா தேவராஜன் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கலை இயக்குனராக ரெமியனும், சண்டைப்பயிற்சிக்கு ஸ்டண்ட் செல்வாவும் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.

 SPB Charans Adhigaram New web series

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 'கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ்' தயாரிப்பில், கேபிள் சங்கரின் ஆக்கம்-எழுத்து வசனத்தில், எஸ்.பி. சரண் இயக்கும் "அதிகாரம்" ஒரு பரபரப்பான அரசியல் தொடராக அமைகிறது

வெள்ளைப்பூக்கள்' தேவ் , ஏ.எல்.அழகப்பன் இளவரசு , 'பிக்பாஸ்' புகழ் அபிராமி , ஜான் விஜய் , அரவிந்த் ஆகாஷ் , வினோதினி வைத்யநாதன். 'சூது கவ்வும்' சிவக்குமார் , கஜராஜ் , ராஜேஷ் , வின், வினோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X