twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தந்தையர் தினக் கொண்டாட்டம்... மறைந்த தந்தை எஸ்பிபிக்கு பாடலால் அஞ்சலி செய்த சரண்

    |

    சென்னை : இன்று சர்வதேச அளவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதையொட்டி திரைத்துறையினர் தங்களது தந்தைக்கு பாராட்டும் நன்றியையும் செலுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் எஸ்பிபி சரண் சமீபத்தில் மறைந்த தன்னுடைய தந்தை எஸ்பிபிக்கு பாடல் ஒன்றால் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

    50 ஆண்டுகள் இசைப்பயணம்

    50 ஆண்டுகள் இசைப்பயணம்

    எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த 1966ம் ஆண்டு தெலுங்கு பாடல் ஒன்றின்மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ஏராளமான பாடல்கள் மூலம் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்தவர். ஏறக்குறைய அனைத்து இசையமைப்பாளர்கள் இசையிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார்.

    கடந்த ஆண்டில் மறைவு

    கடந்த ஆண்டில் மறைவு

    பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளை பெற்றுள்ள இவர், கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் செப்டம்பர் 25ம் தேதி உயிரிழந்தார். இவர் தன்னுடைய கேரியரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

    எஸ்பிபி சரண் பாடலால் அஞ்சலி

    இந்நிலையில் தந்தையர் தினத்தையொட்டி எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் தன்னுடைய தந்தைக்கு இசையால் அஞ்சலி செலுத்தியுள்ளார். எந்தன் நெஞ்சமெல்லாம் உனது நினைவுகள் என்று துவங்கும் அந்த பாடல் மிகவும் உருக்கமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டரில் ஷேர் செய்த மதன் கார்க்கி


    மதன் கார்க்கி வரிகளில் உருவாகியுள்ள இந்த லிரிக்ஸ் வீடியோ பாடலுக்கு தீனா தேவராஜன் இசையமைத்துள்ளார். எஸ்பிபி சரணே பாடியுள்ளார். பாடலின் இடையிடையே சரணும் எஸ்பிபியும் இணைந்துள்ள பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்களும் வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பாடலை மதன் கார்க்கியும் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.

    English summary
    SPB Charan released lyric video song to tribute for his father on father's day
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X