கொடூர கொரோனா.. எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கு தீவிர சிகிச்சை.. குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை!
சென்னை: மைல்டு மைல்டு கொரோனா தான் தனக்கு ஏற்பட்டுள்ளதாக கடந்த வாரம் வீடியோ வெளியிட்டு இருந்த பிரபல் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் தற்போது கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உள்ளார்.
Recommended Video
எம்.ஜி.எம் மருத்துவமனை தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று இரவு முதலே எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ரசிகர்கள் பிரார்த்தனை
பாடு நிலா பாலுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கும் செய்தி அறிந்த ரசிகர்கள் #SPBalasubrahmanyam என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர். எஸ்பி பாலசுப்பிரமணியம் மிகவும் வலுவான மனிதர் என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்து விடுவார் என்றும் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

விரைவில் குணமடைவார்
எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை ஏகப்பட்ட பிரபலங்களுக்கு எண்ணற்ற பாடல்களை பாடியுள்ள ஒரு மகா கலைஞர் ஐசியூவில் இருக்கும் செய்தி அவரது ரசிகர்களை மிகவும் பாதித்துள்ளது. ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் விரைவில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவார் எஸ்பிபி என ட்வீட்களை பதிவிட்டு பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தனுஷ் ரசிகர்கள்
எஸ்பிபியின் மாயக் குரலுக்கு மயங்காத ஆள் உலகிலேயே இல்லை என்று சொல்லலாம். அத்தகைய திறமையான கலைஞருக்கு கொரோனா தொற்று இந்த அளவுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், தனுஷ் ரசிகர்கள் சார்பாக விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.

தென்னிந்திய ரசிகர்களும்
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என கிட்டத்தட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பாலசுப்பிரமணியத்தின் உடல் நிலை செயற்கை சுவாசக் கருவிகளால் இயங்கி வரும் செய்தி அறிந்தவுடன் தெலுங்கு ரசிகர்கள் முதல் தென்னிந்திய ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











