சீக்கிரம் வீட்டுக்கு போகனுமாம்.. எஸ்பிபியின் உடல்நிலை குறித்து அப்டேட் கொடுத்த எஸ்பி சரண்!
சென்னை: பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் இருந்து விரைவில் வீட்டிற்கு செல்ல ஆர்வமாய் இருப்பதாக எஸ்பி சரண் தெரிவித்துள்ளார்.
பிரபல பாடகரான எஸ்பி பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் லேசான தொற்றுடன் சென்ற அவருக்கு திடீரென, பாதிப்பு அதிகமானது. இதனால் ஐசியூவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

கூட்டுப்பிரார்த்தனை
ஒரு கட்டத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பெரும் கலக்கமடைந்தனர். எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டுப் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

அடிக்கடி அப்டேட்
இதனை தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகனும் பாடகருமான எஸ்பி சரண் அடிக்கடி அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

தொடர்ந்து சிகிச்சை
அந்த வகையில் தற்போது எஸ்பிபியின் உடல் நிலை குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் அப்பா நலம் பெறுவதற்கான நிலையை நோக்கி தொடர்ந்து சீராக முன்னேறிக் கொண்டிருக்கிறார். வாய்வழி திரவங்களுடன் எக்மோ/ வெண்டிலேட்டர், பிசியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
Recommended Video

ரசிகர்கள் மகிழ்ச்சி
விரைவில் மருத்துவமனையிலிருந்து வெளியேற அவர் ஆர்வமுடன் உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்பி சரணின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணடைந்து வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











