twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எஸ்.பி.பி பாடலை கேட்டால் கலக்கம் காற்றோடு கலந்துவிடும்-ஆர்.வி.உதயகுமார்

    |

    சென்னை: என்னுடைய முதல் பாடல் கிழக்கு வாசல் படத்தில், பச்ச மல பூவு, நீ உச்சிமல தேனு பாடல். அந்த பாடலுக்காக நான் இளையராஜாவிடம் சண்டையிட்டு , ஒரு மாத காலம் அமெரிக்கா சென்றிருந்த SPB சாருக்காக காத்திருந்து, அவர் தான் இந்த பாடலை பட வேண்டும் என்று அடம்பிடித்து பாட வைத்தேன் என்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.

    சங்கீதம் ஞானம் உள்ளவர்களுக்கு இசை என்றால் என்ன என்பது தெரியும். ஆனால் இசையைப் பற்றி தெரியாதவர்களுக்கு இசை என்றால் இருவர் தான். ஒன்று இசைஞானி இளையராஜா. மற்றோன்று SP.பாலசுப்ரமணியம். ஒரு பாமரனும் ரசிக்க ருசிக்க, காதுகளின் வழியே தேனை நெஞ்சுக்குள் ஊற்றியவர்கள் இந்த இரு ஜாம்பவான்கள் தான்.

    SPB is not only an artist but also a very good man-R.V.Udayakumar

    பின்னணி பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், பின்னணி குரல் கொடுப்பவர் என பல பரிமாணங்கள் மூலம் நம்மை காந்தம் போல தன்வசம் ஈர்த்துக் கொண்டவர். அவரையும் நம்மையும் இணைப்பது இசையே.

    இனிய குரலின் அரசன் SPB தனது 50 ஆண்டு கால திரையுலக வாழ்வில் அனைத்து இந்திய மொழிகளிலும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருந்தாலும், இன்றும் முன்னணி பாடகராக இருந்து வருகிறார் என்றால் அது மிகையில்லை.

    தேன் குழையும் குரலால் நம் அனைவரையும் ஆட்டிப்படைப்பவர். எத்தனை பாடகர்கள் வந்தாலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் இடத்தை ஈடுகட்ட எவராலும் முடியவே முடியாது. அவர் பெற்ற பட்டங்கள், விருதுகள் எண்ணில் அடங்காதவை.

    அந்த இனிய குரல் அரசனை பாராட்டும் வகையில் எங்கேயும் எப்போதும் SPB, என்ற தலைப்பில் ஒரு இனிமையான இசை நிகழ்ச்சியினை ரோட்டரி கிளப் உடன் இணைந்து நடத்தியது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி. அந்த நிகழ்ச்சியில் மேஸ்ட்ரோ SPB அவர்களின் சாதனைக்கு சாட்சியளிக்கும் வகையில் அவரின் இனிய குரலில் வந்தேன்டா பால்காரன், மலரே மவுனமா, மரணம் மாஸ், போவோமா ஊர்கோலம் என அவரது பாடல்களின் மூலம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர், பி.வாசு, நகைச்சுவை நடிகர் செந்தில், ரமேஷ் கண்ணா, ஆர்.வி. உதயகுமார், ரோகினி, ஜான் விஜய் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் SPB பேசுகையில், அவருக்கு இத்தனை நல்ல பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர்கள், இயக்குனர், பாடலாசிரியர், நடிகர்கள் என அனைவர்க்கும் தனது நன்றிகளை தெரிவித்தார். அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் ஒரு பொற்காலம் என்றார்.

    அந்த நிகழ்ச்சியில் பல நெகிழவைக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் ஒன்று இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தன்னுடைய அனுபவம் பற்றி பகிர்ந்தது, அங்கிருந்த அனைவரது நெஞ்சங்களையும் வருடியது. 1994ஆம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபு, நடிகைகள் நதியா மற்றும் மீனா நடித்த திரைப்படம் ராஜகுமாரன்.

    இப்படத்தில் ஆர்.வி.உதயகுமார் எழுதிய என்னவென்று சொல்வதம்மா, என்ற பாடலுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்தவர் SPB. பாட்டின் நாடியாக இருந்தவர் இளையராஜா. அந்த அற்புதமான பாடலை தனக்கு கொடுத்ததற்காக இளையராஜாவுக்கும் ஆர்.வி.உதயகுமாருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார் SPB.

    அப்போது அவர் இளையராஜா பற்றி கூறும்போது, அவர் ஒரு பிறவி கலைஞன். கலைஞனாக பிறந்த ஒருவரால் மட்டுமே இப்படி மெய்மறக்க வைக்க முடியும். அவரின் இசையில் பாடியது எனக்கு கிடைத்த வரம். அவர் எனக்கு பல பாடல்களை வழங்கி என்னை பெருமிதப்படுத்தியுள்ளார், என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

    ஆர்.வி. உதயகுமார், SPB பற்றி பேசுகையில், நான் சிறியவனாக எனது தந்தையுடன் கிராமத்தில் ஆடு மாடு மேய்த்து கொண்டு இருக்கும் போது, நான் கேட்டு மெய் மறந்த குரல் SPBயின் குரல். அந்த குரலைக் கேட்டு வளர்ந்த எனக்கு, கடவுள் கொடுத்த மிக பெரிய வரம் என்னுடைய முதல் பாடலையே என் மனதிற்கு மிகவும் பிடித்த SPB பாடியது தான்.

    என்னுடைய முதல் பாடல் கிழக்கு வாசல் படத்தில், பச்ச மல பூவு, நீ உச்சிமல தேனு பாடல். அந்த பாடலுக்காக நான் இளையராஜா உடன் சண்டையிட்டு , ஒரு மாத காலம் அமெரிக்கா சென்றிருந்த SPB சாருக்காக காத்திருந்து, அவர் தான் இந்த பாடலை பட வேண்டும் என்று அடம்பிடித்து பாட வைத்தேன் என்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசினார் இயக்குனர் ஆர்.வி. உதயகுமார்.

    ஆர்.வி.உதயகுமார் மேலும் அந்த நினைவுகள் குறித்து பேசுகையில், SPB தனது இனிய குரலால் பார்வையாளர்களை அந்த பாடல்கள் மூலம் மெய்சிலிர்க்க வைத்தார். அவர் பாடுகையில் நமக்கு ஒன்ஸ் மோர், ஒன்ஸ் மோர் என்று கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். கொஞ்சி கொஞ்சி அவர் பாடல்கள் பாடும் போது, அப்படியே அவரை கட்டிக்கொள்ள வேண்டும் என்று நமக்கு தோன்றும்.

    நம் மனதில் எந்த ஒரு கலக்கமோ வருத்தமோ இருந்தாலும் அது அப்படியே காற்றோடு காற்றாக கரைந்து விடும். அவரின் குரலில் மயங்காதவர் என எவராவது இருப்பார்களா, அவர் ஒரு கலைஞன் மட்டுமல்ல மிக சிறந்த மனிதன். மிகவும் தாழ்மையானவர். வளரும் தலைமுறையினர் அவரது தன்னடக்கத்தையும் மற்றவர்களை ஊக்குவிக்கும் குணத்தையும் நிச்சயம் கற்று கொள்ள வேண்டும்.

    அன்றும் இன்றும் என்றும் நம்மோடு SPB தனது இனிய குரலால் நம்மோடு வாழ்வார். அவர் மேலும் பல்லாண்டு பல்லாண்டு காலம் இதே போல் பாடிக்கொண்டே நம்மை மகிழ்வித்து கொண்டே ஆரோக்கியமாக வாழ வேண்டும், என்று பேசினார்.

    English summary
    My first song was 'Pacha mala Poovu Nee uchchi mala thenu’ song in ‘Kizhakku Vaasal’ Movie. I fought with composer Ilaiyaraaja for that song and waited for the SPB who had been in the US for a month, said R.V.Udayakumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X