twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைந்தார் பாடும் நிலா பாலு.. பாடகராக மட்டுமின்றி திரை வானில் நடிகராகவும் ஜொலித்தவர்!

    |

    சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார்.

    கொரோனா தொற்று காரணமாக சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும், தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

    அவரது மறைவு ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும், பிரபலங்களையும் துயரக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

    40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் வெறும் பின்னணி பாடகராக மட்டுமின்றி, ஏகப்பட்ட படங்களில் நல்ல நடிகராகவும் நடித்து அசத்தி உள்ளார்.

    நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.. எஸ்பிபியை சந்தித்த பிறகு பாரதிராஜா குரல் தழுதழுக்க பேட்டி! நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுள்ளேன்.. எஸ்பிபியை சந்தித்த பிறகு பாரதிராஜா குரல் தழுதழுக்க பேட்டி!

    மூன்று மொழிகளில்

    மூன்று மொழிகளில்

    16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடு நிலா பாலு, தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் கிட்டத்தட்ட 75 படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் வெளியான சில அருமையான திரைப்படங்கள் குறித்து இங்கே காண்போம்.

    மனதில் உறுதி வேண்டும்

    மனதில் உறுதி வேண்டும்

    பெல்லென்டே நூரல்லா பன்டா எனும் தெலுங்கு படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமான எஸ்.பி. பாலசுப்ரமணியம், தமிழில் 1971ம் ஆண்டு வெளியான முகமது பின் துக்ளக் என்கிற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார். 1987ம் ஆண்டு கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான மனதில் உறுதி வேண்டும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகாவுடன் இணைந்து நடித்து இருந்தார்.

    கேளடி கண்மணி

    கேளடி கண்மணி

    மனதில் உறுதி வேண்டும் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ராதிகாவுடன் இணைந்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் இணைந்து நடித்த கேளடி கண்மணி படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். இயக்குநர் வசந்த் இயக்குநராக அறிமுகமான அந்த படத்தில் இடம்பெற்ற "மண்ணில் இந்த காதல்" பாடலும் மூச்சி விடாமல் பாடும் பாடு நிலாவையும் என்றுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

    குணா

    குணா

    இயக்குநர் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து அசத்திய குணா படத்தில் ராமைய்யா எனும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்து இருப்பார். தமிழில் வெளியான குணா படத்தில் ஒரு பாடலை கூட எஸ்.பி.பி பாடாத நிலையில், அந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனில் 3 பாடல்களை எஸ்.பி.பி. பாடி இருப்பார். "கண்மணி அன்போடு" பாடலின் தெலுங்கு வெர்ஷன் கூடத்தான்.

    அப்பா கதாபாத்திரம்

    அப்பா கதாபாத்திரம்

    இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா, ரகுவரன், கிரிஷ் கர்நாட், வடிவேலு நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படம் காதலன். இந்த படத்தில், நாயகன் பிரபுதேவாவின் பாசமான தந்தை கதிரேசனாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் நடித்து இருப்பார். மேலும், "காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்" பாடலில் பிரபுதேவாவுடன் இணைந்து ஆடியிருப்பார். உதித் நாராயணன் உடன் இணைந்து பாடி இருப்பார்.

    மின்சார கனவு

    மின்சார கனவு

    இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் பிரபுதேவா, கஜோல், அரவிந்த் சாமி, நாசர் நடிப்பில் வெளியான மின்சார கனவு படத்தில், நடிகர் அரவிந்த் சாமியின் அப்பாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவரது அழுத்தத்தால் தான் நடிகை கஜோலையே காதலிக்கத் தொடங்குவார் அரவிந்த் சாமி, ஆனால், நம்ம பிரபுதேவா இடையில் புகுந்து ஆட்டையை கலைத்திருப்பார்.

    சாய் பாபா பக்தர்

    சாய் பாபா பக்தர்

    தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் உருவான சாய் பாபா பற்றிய படமான மாயா படத்தில் பொம்மை ரங்கனாக நடித்து இருப்பார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். தமிழில் நெப்போலியன், நக்மா, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். மாயா படத்திற்காக அவர் பாடிய "பாபா ஓர் கருணாலயம்" பாடல் சாய் பாபா ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக மாறியது.

    Recommended Video

    SPB உடல் நலக் குறைவு காரணமாக மதியம் 1.04 மணிக்கு காலமானார்
    தளபதி விஜய்யுடன்

    தளபதி விஜய்யுடன்

    2000ம் ஆண்டு இயக்குநர் கே. செல்வ பாரதி இயக்கத்தில் தளபதி விஜய், சிம்ரன் நடிப்பில் வெளியான பிரியமானவளே படத்தில் நடிகர் விஜய்யின் அப்பாவாக நடித்து இருப்பார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். நாணயம், திருடன் போலீஸ் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஏகப்பட்ட தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம் எப்போதுமே தமிழ் மக்கள் மனங்களில் நீடித்து இருப்பார்.

    English summary
    Veteran Playback singer SP Balasubrahmanyam passed away. Not only a great singer he also acting in lot of movies with good characters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X