Darbar முருகதாஸுக்கு இருக்கும் பிரச்சனை பத்தாதுன்னு எஸ்.பி.பி. வேற!!!

By Siva

சென்னை: எஸ். பி. பாலசுப்பிரமணியம் மகிழ்ச்சியில் பேசியது இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுக்கு பிரச்சனையாகியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படம் இயக்கத் துவங்கியதில் இருந்து அவருக்கு அடுத்தடுத்து பிரச்சனையாக உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

SPB reveals interesting information about Darbar

படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அவர் என்ன தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் வீடியோக்கள் கசிவதை மட்டும் தடுக்க முடியவில்லை. இந்த கசிவுகளுக்கு படக்குழுவை சேர்ந்த யாரோ தான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தர்பார் படத்தில் ரஜினியின் ஓபனிங் பாடலை எஸ். பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார். இந்த படத்திலாவது அனிருத் எஸ்.பி. பியை முழுப் பாடலை பாட வைத்திருப்பார் என்று நம்பப்படுகிறது. பேட்ட படம் போன்று எஸ்.பி.பிக்கு வெறும் இரண்டு வரியை கொடுத்து ரசிகர்களை ஏமாற்றாமல் இருந்தால் சரி.

தர்பார் படத்தில் பாடியது குறித்து கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எஸ்.பி.பி. கூறியதாவது,

அருமையான சிச்சுவேஷன். ரஜினி சார் மும்பையில் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவருக்காக பாராட்டு விழா நடத்துகிறார்கள். கடமையை செய்வதற்கு எதற்காக பாராட்டு விழா எல்லாம் நடத்துகிறீர்கள் என்று ரஜினி சார் கேட்பார். காக்கிச் சட்டையை போட்டால் நான் போலீஸ், கழற்றினால் நான் சாதாரண மனிதன் என்று கூறி ஒரு பாட்டு பாடுவார். அந்த பாடலை தான் நான் பாடியிருக்கிறேன். ரொம்ப அருமையா வந்திருக்கு, அனிருத் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கு நன்றிகள் என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தர்பார் கதை பற்றி அவ்வப்போது ஏதாவது கசிந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரஜினி மீதான பாசத்தால், அவருக்காக பாடிய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன் என்று எஸ்.பி.பி. கதையை சொல்லிவிட்டார். பாவம் முருகதாஸ், இப்படி ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடித்தால் அவரும் என்ன தான் செய்வார்.

நீங்க கவலைப்படாதீங்க முருகதாஸ் சார், முழுக்கதையும் வெளியானாலும் நாங்கள் படத்தை பார்ப்போம் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சில குசும்புக்கார நெட்டிசன்களோ, அய்யோ அவர் கவலையே கதையை கேட்டுவிட்டு இது என் கதை என்று யாராவது கிளம்பிடுவார்கள் என்பது தான் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X