twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சங்கராபரணம்' படப்பாடல்களை பாட மறுத்தேன்!- எஸ்.பி. பாலசுப்ரமணியம்

    By Shankar
    |

    இந்திய சினிமாவின் மறக்க முடியாத இசைக் காவியமான சங்கராபரணம் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் உருவாகிவருகிறது.

    இந்தப் படத்தில் பாடிய அனுபவம் குறித்து எஸ் பி பாலசுப்பிரமணியம் கூறியதாவது:

    " கடந்த 35 ஆண்டுகளாக 'சங்கராபரணம்' படம் பற்றி எத்தனை மணி நேரம் பேசியிருப்பேன், எந்தெந்த இடங்களில்.. பேசியிருப்பேன், எந்தெந்த தொலைக்காட்சிகளில் பேசியிருப்பேன், எந்தெந்த மொழிகளில் பேசியிருப்பேன் என்று கணக்கிட முடியாது.

    கன்னத்தில் அறைந்து..

    கன்னத்தில் அறைந்து..

    என் தொழில் வாழ்க்கையில் 'சங்கராபரணம்' மிகப்பெரிய அத்தியாயம். நான் ஒருநாளைக்கு நாலைந்து ரெங்கார்டிங் என்று பரபரப்பாக இருந்தகாலம் அது.

    'சங்கராபரணம்' தெலுங்கில் எடுக்கும் போது கே.வி. மகாதேவன் அண்ணா எங்கள் அப்பாவிடம் இதே வீட்டில் கதை சொல்லும் போது, 'முதலில் இதைப் பாடிவிட்டு பிறகு வேறு பாடல் பதிவுக்கு போகச் சொல்லுங்கள்' என்றார். இந்தப் படத்தில் அவன் பாடவில்லை என்றால் ஒழுங்காக.. அவனை கன்னத்துல அறைந்து பாடவையுங்கள் என்றார் அப்பா.

    இப்படி ஒரு வாய்ப்பு அவனுக்கு கிடைக்குமா? என்றாராம் அப்பா.

    கற்றுக் கொண்டேன்

    கற்றுக் கொண்டேன்

    மீண்டும் படத்தின் கதையை இயக்குநர் கே. விஸ்வநாத் அவர்கள் சொன்ன போது எனக்குப் பயம். எனக்கு சம்பிரதாய சங்கீதம் தெரியாது. அந்தப் பயிற்சி எடுக்காதவன் நான். எனவே என்னால் பாடமுடியாது என்று மறுத்தேன். ஆனால் கேவிஎம் விடவில்லை. அவரைவிட அவரது உதவியாளர் புகழேந்தி சார் விடாது வற்புறுத்தியதுடன், அவகாசம் கொடுத்து சாஸ்திரீய சங்கீதம் கற்றுக் கொண்டால் பாடவைப்பேன் என்று ஊக்கம் கொடுத்தார். அவரே பாடி கேசட் கொடுத்தார். அதை லூப் மாதிரி வைத்து எங்கு போனாலும் காரில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் கேட்டு கேட்டு அத்துப்படி ஆனபிறகுதான் பாடல் பதிவுக்கே போனேன். பதிவின் போது எஸ். ஜானகியம்மா, வாணி ஜெயராம் அம்மா ஒத்துழைப்பு கொடுத்த விதம் மறக்கவே முடியாது.

    ஒரு ஆண்டு ஓடியது

    ஒரு ஆண்டு ஓடியது

    சீனாக்குட்டி அண்ணன் மிருதங்கம் வாசித்தார். ராகவன் சார் வீணை வாசித்தார்.சுதர்சன் புல்லாங்குழல் வாசித்தார். இப்படிப் பல சம்பிரதாய மேதைகள் பங்குபெற்று எனக்கு ஆசி கொடுத்து உருவான பாடல்கள் அவை. இந்தப்படம் தமிழ்நாட்டில் தெலுங்கிலேயே வெளியாகி ஓராண்டு ஓடியது. மேஜர் சுந்தர்ராஜன் வெளியிட்டதாக நினைக்கிறேன்.

    தேவையா?

    தேவையா?

    மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. பாடல்கள் மட்டும் தெலுங்கிலேயே இருந்தன. இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 35 ஆண்டுகள் கழித்து நவீன தொழில் நுட்பத்துடன் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இது இப்போது தேவையா என கேட்கக் கூடும்.

    நவீன ஒலி, ஒளி நுட்பத்தில் பளிச்சென இருக்கும்படி மெருகேற்றப்பட்டு வருகிறது. நிச்சயம் வரவேற்கப்படும்.

    ஒருகாலத்தில் தெலுங்கிலேயே வெளியாகி வரலாறு படைத்த படத்தை தமிழிலேயே பார்த்திடும் பெருமை எல்லாருக்கும் கிடைக்குமா?

    'சங்கராபரணம்' பற்றிச் சொல்ல நிறைய செய்திகள் என்னிடம் உண்டு.

    இந்தப் படத்தில் இயக்குநரிடம் சோமயாஜுலுவை அறிமுகம் செய்ததே நான்தான். அவர் அதற்கு முன் 'ராரா கிருஷ்ணா' என்கிற தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். நான்தான் அதற்கு இசையமைத்திருந்தேன்.

    மும்பையிலிருந்து லதா மங்கேஷ்கர் அம்மா, சிவாஜி அண்ணா, நான் எல்லாரும் ஒன்றாக இருந்து இந்தப் படத்தைப் பார்த்தது மறக்க முடியாதது.

    தேசிய விருதுகள்

    தேசிய விருதுகள்

    எனக்கு முதலில் 1990ல் தேசிய விருது வாங்கிக் கொடுத்தபடம் இது. வாணிஜெயராம், கே.வி.மகாதேவன், கே.விஸ்வநாத்துக்கும் தேசியவிருது கிடைத்தது. அது மட்டுமல்ல சிறந்த பிராந்திய மொழிப்படம் என்கிற தேசியவிருதும் கிடைத்தது. மாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு பேசப்பட்டது.

    இந்தப் படத்தில் நடித்த சோமயாஜுலு, மஞ்சுபார்கவி, அல்லு ராமலிங்கய்யா, சந்திரமோகன், ராஜலட்சுமி ஆகி யோருக்கு பெரிய பாராட்டுகள் கிடைத்தன. எல்லாருடைய இதயங்களையும் தொட்ட கதை இது.

    பாடாமல் விட்டதில்லை

    பாடாமல் விட்டதில்லை

    சம்பிரதாய சங்கீதத்தில் ஒரு பாடல்பாட வேண்டுமென்றால் கூட ஆலாபனை செய்து நிரவல் பண்ணி ஸ்வரம் பாட ஒரு மணிநேரம் பிடிக்கும். ஆனால் சினிமா ரசிகர்கள், சாதாரண மக்களையும் பாடவைத்தவர் கே.வி.மகாதேவன். நான் எந்த மேடை ஏறினாலும் 'சங்கராபரணம்' படப் பாடல்களை பாடாமல் விட்டதில்லை. பாடாமல் என்னை ரசிகர்களும் விட்டதில்லை

    என்னை நம்பி மீண்டும் இந்தப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இந்தப்படம் தமிழில் வெற்றிபெற வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன்."

    -இவ்வாறு எஸ்பி பாலசுப்பிரமணியம் கூறினார்.

    English summary
    Legendary singer SP Balasubramaniyam is sharing his experience in Sankarabaranam recording.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X