twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமலின் 'ஏக் தூஜே கேலியே' முதல் 'சென்னை எக்ஸ்பிரஸ்' வரை.. இந்தியிலும் அசத்திய எஸ்.பி.பி!

    By
    |

    சென்னை: தமிழ், தெலுங்கில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இந்தியிலும் மறக்க முடியாத பாடல்களை பாடி உள்ளார்.

    மறைந்த எஸ்.பி.பி, தமிழ், தெலுங்கில் பாடியதை விட இந்தியில் பாடியது குறைவுதான் என்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை.

    தமிழில் எஸ்.பி.பிக்கு சாந்தி நிலையம் படத்தின் 'இயற்கை எனும் இளையக்கன்னி'தான் முதல் பாடல்.

    ஏக் துஜே கேலியே

    ஏக் துஜே கேலியே

    இந்தியில் அவருடைய முதல் பாடல் அமைந்தது, கமல், ரதி நடித்த ஏக் தூஜே கேலியே படத்தில்தான். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது போல, அங்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த பாடல் கூட. கே.பாலசந்தர் அந்தப் படத்தை இயக்கியதால்தான் கிடைத்திருக்கும்.

    ஹம் தும் தோனோ

    ஹம் தும் தோனோ

    ஏனென்றால் பாலிவுட், இங்குள்ள திறமைகளை எப்போதுமே கண்டுகொள்வதில்லை. ஏக் தூஜே கேலியே படம் 1981 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதில், ஹம் தும் தோனோ ஜப் மில் ஜாயேங்கே, மேரே ஜீவன் சாத்தி, ஹம்பனே தும் பனே உள்பட அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். இந்தப் படத்துக்கு லஷ்மிகாந்த் பியாரிலால் இசை அமைத்திருந்தார்.

     மைனே பியார் கியா

    மைனே பியார் கியா

    அடுத்து ரஜினிகாந்த் நடித்த அந்தாகானூன், கமல் நடித்த சாகர் உள்பட சில படங்களில் பாடியிருந்தாலும் 1989 ஆம் ஆண்டு வெளியான 'மைனே பியார் கியா' படம் எஸ்.பி.பிக்கு இந்தியில் அடுத்த ரவுண்டை ஆரம்பித்து வைத்தது. பிரபல நடிகர் சல்மான் கான் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான்.

    குரல் பொருந்தியது

    குரல் பொருந்தியது

    இதில் எஸ்.பி.பி அனைத்து பாடல்களையும் பாடி இருந்தார். அத்தனையும் ஹிட். இதையடுத்து சஞ்சய் தத், சல்மான்கான் நடித்த சாஜன், பத்தர் கே பூல், ஹம் ஆப்கே ஹைன் கோன் உள்பட பல படங்களில் பாடினார். சல்மானுக்கு எஸ்.பி.பியின் குரல் பொருந்தி விட அவரது படங்களுக்குத் தொடர்ந்து பாடி வந்தார் எஸ்.பி.பி.

    சென்னை எக்ஸ்பிரஸ்

    சென்னை எக்ஸ்பிரஸ்

    பிறகு அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுக்கவில்லை. கடைசியாக, விஷால் சேகர் இசையில் ஷாருக்கான் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் பாடலை பாடியிருந்தார் எஸ்.பி.பி! இசைக்கு மொழியில்லை. இந்த இந்திப் பாடல்கள் கூட மொழி புரியவில்லை என்றாலும் எஸ்.பி.பியின் குரல் வழி சுகமான உணர்வைத் தந்துகொண்டிருப்பதை மறக்க முடியுமா என்ன?

    English summary
    Ek Duuje Ke Liye to chennai express..SPB's unforgattable hindi songs!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X