மீண்டும் எஸ்.பி.பி... இந்த ராசியாவது ரஜினிக்கு கை கொடுக்குமா பார்க்கலாம்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் இன்னும் பெயரிடப்படாத படத்தில், ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படம் எதிர்பார்த்த அளவு மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. வசூலும் பெரிய அளவில் இல்லை.
ஆனபோதும், தற்போது தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாகி விட்டார் ரஜினி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது.

முதன்முறையாக அனிருத்:
இதுவரை கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைத்து வந்தார். இந்நிலையில், இப்படத்தின் மூலம் முதன்முறையாக அனிருத்துடன் இணைகிறார் கார்த்திக் சுப்புராஜ்.

வெற்றி நிச்சயம்:
இது ஒருபுறம் இருக்க, இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாட இருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடிய படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன.

சரிவு:
அதற்கு மாறாக பாபா, கபாலி, காலா உள்ளிட்ட சில படங்களில் ரஜினியின் அறிமுகப் பாடலை எஸ்.பி.பி. பாடவில்லை. இப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் சரிவைச் சந்தித்தன.

செண்டிமெண்டா?
இந்தக் காரணங்களினாலோ என்னவோ தற்போது கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை மீண்டும் எஸ்.பி.பி.யே பாட இருக்கிறார். செண்டிமெண்டிற்காக படக்குழு இந்த முடிவை எடுத்ததா அல்லது கதாபாத்திரத்திற்கு அவரது குரல் தேவைப்பட்டதா என்பது தெரியவில்லை.

வெற்றிக் கூட்டணி:
ஆனால், எது எப்படியோ கிட்டத்தட்ட 30 ஆண்டுகால வெற்றிக் கூட்டணியான ரஜினி - எஸ்.பி.பி மீண்டும் இப்படத்தின் மூலம் இணைவது, இருவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











