அதிசயம் ஆனால் உண்மை: இளையராஜா இசையில் தாலாட்டு பாடிய எஸ்.பி.பி.
சென்னை: விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திற்காக இளையராஜா இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜா தனது பாடல்களுக்கு ராயல்டி கேட்டார். தன் அனுமதி இன்று தன் பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மேடைகளில் பாடக் கூடாது என்றார். அந்த காரணத்தால் இளையராஜாவும், அவரின் நெருங்கிய நண்பரான பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் பிரிந்தார்கள்.
இளையராஜா தடுத்தாலும் நான் தொடர்ந்து அவர் பாடல்களை மேடையில் பாடுவேன் என்றார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். அய்யோ இனி இளையராஜா இசையில் எஸ்.பி.பி. பாடவே மாட்டாரா என்று அவரின் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

எஸ்.பி.பி.
பிரச்சனையை எல்லாம் மறந்து இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர். அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்த்த ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருந்தது.

பாடல்
இளையராஜாவும், எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் ஒன்று சேர்ந்த செய்தியை பார்த்தே அவ்வளவு மகிழ்ந்த ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சிகரமாக செய்தி கிடைத்துள்ளது. அதாவது விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தமிழரசன் படத்தில் இளையராஜாவுடன் கை கோர்த்துள்ளார் எஸ்.பி.பி.

வா வா என் மகனே
தமிழரசன் படத்திற்கு இளையராஜா தான் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவர் இசையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல் ஒன்றை பாடியுள்ளார். பழனிபாரதி எழுதிய வா வா என் மகனே என்கிற தாலாட்டு பாடலை எஸ்.பி.பி. பாடியுள்ளார். அந்த பாடல் இந்த ஆண்டின் வெற்றிப் பாடல்கள் பட்டியலில் சேரும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஜேசுதாஸ்
பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மட்டும் அல்ல ஜேசுதாஸும் ஒரு பாடல் பாடியுள்ளார். 10 ஆண்டுகள் கழித்து அவர் இசைஞானி இளையராஜாவின் இசையில் பாடியுள்ளார். தமிழரசன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஒரே மேடையில் இளையராஜா, எஸ்.பி. பாலசுப்பிரமணியம், ஜேசுதாஸ் தோன்றினால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அதை தமிழரசன் படக்குழு நிறைவேற்றி வைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











