ஆமா.. லிங்காவில் ரஜினிக்கு அறிமுகப் பாடல் பாடியிருக்கேன்!- எஸ்பிபி
லிங்கா படத்தில் ரஜினிக்கான ஆரம்பப் பாடலை நான்தான் பாடியிருக்கிறேன் என்று எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
ரஜினி படம் என்றால், அதில் அவருக்கு ஒரு அறிமுகப் பாடல் இருக்கும் என்பது பல ஆண்டுகளாக இருந்து வரும் வழக்கம்.

சென்டிமென்டாக, அந்தப் பாடலை எஸ்பி பாலசுப்பிரமணியம் பாடுவது வழக்கம். ரஜினி படங்களுக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கத் தொடங்கிய பிறகு, ரஜினிக்கான ஆஸ்தான பாடகர்களை மாற்றி, புதுப்புது பாடகர்களைப் பாட வைத்தார்.
முத்து படத்தில் முதல் முறையா உதித் நாராயணன், ஹரிஹரன் போன்றவர்கள் ரஜினிக்குப் பாடினர். இருந்தாலும் அவருக்கான அறிமுகப் பாடலை மட்டும் எஸ்பி பாலசுப்பிரமணியன்தான் பாடினார்.
பின்னர் வந்த அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் போன்ற படங்களிலும் எஸ்பிபிதான் அறிமுகப் பாடல் பாடினார்.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் இப்போது உருவாகி வரும் ரஜினி படமான லிங்காவில் எஸ்பிபி பாடுகிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு வந்தனர்.
இதற்கு பதிலளித்துள்ள எஸ்பி பாலசுப்பிரமணியம், "இந்தப் படத்தில் ரஜினிக்கு நான் அறிமுகப் பாடல் பாடுகிறேனா என்று பலரும் கேட்டு வந்தனர். ஆமாம்.. நான்தான் அறிமுகப் பாடல் பாடுகிறேன். வைரமுத்து எழுதிய பாடலை ரஹ்மான் இசையில் பாடியுள்ளேன்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











