twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேசிய விருது தந்த படம்.. 'சங்கராபரணம்' வாய்ப்பு பாடகர் எஸ்.பி.பி-க்கு கிடைத்தது இப்படித்தான்!

    By
    |

    சென்னை: எஸ்.பி.பிக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்த சங்கராபரணம் படப் பாடல்களை முதலில் பாட இருந்தவர் வேறொரு புகழ்பெற்ற பாடகர்!

    நாற்பதாயிரம் பாடல்களை இனிமையாக, இளமையாக பாடிய எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் அடங்கிவிட்டது.

    தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

     ஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. டிவிட்டரில் உருக்கம்! ஜெய்ப்பூரில் இருந்தப்படியே எஸ்பிபிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகை ராதிகா.. டிவிட்டரில் உருக்கம்!

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 5-ஆம் தேதி சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா அறிகுறி என்று அனுமதிக்கப்பட்டார் அவர். உடல் நிலை மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் நேற்று காலமானார்.

    சங்கராபரணம்

    சங்கராபரணம்

    எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு முதல் தேசிய விருதை பெற்று தந்த படம், சங்கராபரணம். கே.விஸ்வநாத் இயக்கி இருந்த இந்த படம் 1980 ஆம் ஆண்டு வெளியானது. சோமையாஜூலு, மஞ்சு பார்கவி, ராஜலட்சுமி, துளசி, சந்திரமோகன் உள்பட பலர் நடித்திருந்த படம் இது. பாலு மகேந்திரா ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார்.

    சர்வதேச விருதுகள்

    சர்வதேச விருதுகள்

    படத்தில் மொத்தம் 10 பாடல்கள். அதில் ஒன்பது பாடல்களை பாடியிருந்தார், எஸ்.பி.பி. ஒரு பாடலை வாணி ஜெயராம் பாடி இருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்கு பல சர்வதேச விருதுகளும் கிடைத்தன. நான்கு தேசிய விருதுகளையும் பெற்றது. அதில் ஒன்று பாடலுக்காக. அந்த விருதை எஸ்.பி.பி பெற்றார்.

    கர்நாடக சங்கீதம்

    கர்நாடக சங்கீதம்

    இந்தப் படமும் எஸ்.பி.பியின் குரலுடன் கூடிய இதன் பாடல்களும் இன்றுவரை பிரபலம். இந்த படத்தின் பாடல்களை பாட, முதலில் முடிவு செய்யப்பட்டு இருந்தவர் எஸ்.பி.பி இல்லை. அவருக்கு கர்நாடக சங்கீதம் அதிகம் தெரியாது என்பதால் சரியாகப் பாடுவாரா என்பதில் சந்தேகம் இருந்தது படக்குழுவுக்கு.

    பாலமுரளி கிருஷ்ணா

    பாலமுரளி கிருஷ்ணா

    இதனால் அவர்கள், பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைக்க முடிவு செய்திருந்தனர். இது முழுக்க முழுக்க கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட படம் என்று தெரிந்தும் இதில் பாட ஆர்வம் காட்டவில்லை, பாலமுரளி கிருஷ்ணா. இதையடுத்துதான், எஸ்.பி.பியை பாட வைக்க முடிவு செய்தனர்.

    கே.வி.மகாதேவன்

    கே.வி.மகாதேவன்

    இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனும் வேறு சிலரும் எஸ்.பி.பிக்கு சில மாதம் கர்நாடக சங்கீகத்தை கற்றுக் கொடுத்து இந்தப் படத்தின் பாடல்களை பாட வைத்தனர். படமும் பாடல்களும் ஹிட். எஸ்.பி.பியின் பாடலுக்கு மரியாதையும் பாராட்டுகளும் குவிந்தபோது அதை கடுமையாக விமர்சித்தார் பாலமுரளி கிருஷ்ணா.

    பாட முடியாது

    பாட முடியாது

    ஆனால், அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டார் எஸ்.பி.பி. அவருக்கு எதிராக எந்த பதிலையும் கூறவில்லை. இதனால் எஸ்.பி.பி மீது மரியாதைக் கூடியது. பின்னர் ஒரு பேட்டியில் பாலமுரளி கிருஷ்ணா சொன்னார், 'பாலமுரளி கிருஷ்ணா போல எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட முடியும். ஆனால், பாலமுரளி கிருஷ்ணாவால், எஸ்.பி.பி மாதிரி பாட முடியாது' என்று.

    Recommended Video

    SPB -யின் கடைசி பாடல் ரஜினிக்காக பாடியுள்ளார் | FilmiBeat Tamil

    English summary
    SPB Was Not The First Choice For Sankarabharanam!
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X