எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்.. இன்னும் வென்டிலேட்டரில்தான் இருக்கிறார்.. எஸ்.பி.பி சரண் தகவல்!
சென்னை: தனது தந்தை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் அம்மாவும் குணமடைந்து வருவதாக எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது உடல்நிலை சீராக உள்ளது எனவும் விரைவில் திரும்பி வருவேன் எனவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் கூறியிருந்தார்.

எஸ்.பி.பி சரண்
இதையடுத்து இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரை பிரபலங்களும் அவர் ரசிகர்களும் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினர். சமூக வலைதளங்களிலும் அவர் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் தினமும் தகவல் தெரிவித்து வருகிறார்.

மகிழ்ச்சியான செய்தி
நேற்று மாலையில் அவர் வெளியிட்ட வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: அப்பா மூன்றாவது தளத்திலிருந்த ஐசியூவில் இருந்து ஆறாவது தளத்திலிருந்த ஐசியூவில் மாற்றப்பட்டார். மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் அப்பாவின் உடல்நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களிடம் தம்ப்ஸ் அப் குறியைக் காட்டுகிறார், அவருக்கு மருத்துவர்களை அடையாளம் தெரிகிறது.

குணமடைந்து வருகிறார்
ஆனால் இன்னும் வென்டிலேட்டரில்தான் இருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது நல்லபடியாக மூச்சு விடுகிறார். இதை நல்ல முன்னேற்றமாக மருத்துவர்கள் பார்க்கிறார்கள். அவர் குணமடைந்து வருகிறார். அவர் முழுமையாகக் குணமடைய நாட்கள் ஆகும். நாங்கள் முழு நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஆனால் இது ஒரு நாளிலோ இரண்டு நாட்களிலோ நடந்து விடாது. நிச்சயமாக விரைவாகக் குணமடைந்து வீடு திரும்புவார்.

நன்றிக்கடன்
அவர் நல்லபடியாக இருப்பதில் எங்களுக்கும் மருத்துவர்களுக்கும் மகிழ்ச்சி. தொடர்ந்து அவருக்காகப் பிரார்த்தனை செய்வோம். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைகளுக்கும் நானும் என் குடும்பத்தினரும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். என் அம்மாவும் குணமடைந்து வருகிறார். செவ்வாய் அல்லது புதன் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் நன்றி. இவ்வாறு எஸ்.பி.சரண் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











