'தப்போ ரைட்டோ என்கிட்டயே பேசுங்க...' பேஸ்புக்கில் அதிரடியாக போன் நம்பர் வெளியிட்ட பிக்பாஸ் நடிகை!

By

கொச்சி: தன்னைப் பற்றிய நெகட்டிவ் அல்லது பாசிட்டிவ் செய்திகளை தன்னிடமே தெரிவிக்குமாறு பிக்பாஸ் நடிகை ஒருவர் போன் நம்பரை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தனியார் டிவி.நிகழ்ச்சியான பிக்பாஸ், இந்தியில் தொடங்கி பிற மாநில மொழிகளிலும் நடந்து வருகிறது.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை பிரபல நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

ஜூனியர் என்.டி.ஆர்

ஜூனியர் என்.டி.ஆர்

மலையாளத்தில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லாலும் கன்னடத்தில் 'நான் ஈ' சுதீப்பும் தொகுத்து வழங்குகின்றனர். தெலுங்கில், நாகார்ஜுனா, நானி, ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் ஒவ்வொரு எபிசோடையும் வழங்கினர். இப்போது முதல் எபிசோடை தொகுத்து வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர் வழங்குகிறார்.

சினிமாவில் நடிக்க

சினிமாவில் நடிக்க

இதில் சினிமா நடிகர்கள், நடிகைகள், மாடல்கள் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சி அதிகமான பார்வையாளர்களைக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் தமிழில் பிரபலமான தர்ஷன், லாஸ்லியா, கவின், ஆரவ் உள்ளிட்ட பலருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்னும் சிலர் நடிக்க இருக்கின்றனர்.

மஞ்சு பத்ரோஸ்

மஞ்சு பத்ரோஸ்

இந்நிலையில் தமிழைப் போலவே மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியும் பிரபலமடைந்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர், மலையாள நடிகை மஞ்சு பத்ரோஸ். இவர், சக்ரம், நார்த் 24 கோட்டயம், கதா பறஞ்ச கதா, உல்டா, திலீப்பின் மை சான்டா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், 49 நாட்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார்.

விமர்சனங்கள்

விமர்சனங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. பலர் கடுமையானத் திட்டியிருந்தனர். இதை வெளியே வந்த பின் கேள்விபட்ட நடிகை மஞ்சு பத்ரோஸ் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பேஸ்புக்கில் அவர் ஒரு பதிவு இட்டார். அதில், தனது போன் நம்பரை அவர் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தவறான செய்திகள்

தவறான செய்திகள்

அந்த பதிவில் அவர், 'நான் வாழ்வின் முக்கியமான கட்டத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 49 நாட்கள் வெற்றிகரமான நிகழ்ச்சியில் பங்கேற்றபின் நான் வெளியேற்றப்பட்டேன். என்னைப்பற்றி தவறான செய்திகள் சமூகவலைதளங்களில் வருவதாக அறிந்தேன். எனது சமூக வலைத்தளப் பக்கங்களை நண்பர்கள் நடத்தி வந்தனர்.

பரபரப்பு

பரபரப்பு

அதனால், என்னைப் பற்றி உங்களுக்கு எதிர்மறை கருத்துகளோ, நேர்மறை கருத்துக்களோ இருந்தால், என்னிடமே நீங்கள் தெரிவிக்கலாம். அதை நான் வரவேற்கிறேன். என் போன் நம்பர் இதுதான் என்று கூறி அதை பதிவு செய்துள்ளார். நடிகை மஞ்சுவின் இந்தப் பதிவு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X