இது அஜித்-னு சொன்னா ஷாலினிகூட நம்ப மாட்டாங்களே பாஸ்!
நடிகர் அஜித்திற்கு சாக்லேட்டில் சிலை வைத்துள்ளார் ஒரு ரசிகர்.
சென்னை: விஸ்வாசம் பட வெற்றியைக் கொண்டாடும் வகையில் ரசிகர் ஒருவர் அஜித்திற்கு சாக்லேட் சிலை ஒன்றை வைத்துள்ளார்.
சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் கடந்த வாரம் ரிலீசானது. கிராமத்துப் பின்னணியில் குடும்ப பாசத்தைப் பற்றிப் பேசும் இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூலிலும் இப்படம் சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் அஜித்தின் ரசிகர் ஒருவர் விஸ்வாசம் படத்தில் அவரது கெட்டப்பை சாக்லேட் சிலையாக வடிவமைத்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளார். இந்தச் சிலை எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய தெளிவான தகவல்கள் இல்லை. ஆனால், இந்தப் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
முக்கிய பிரபலங்களுக்கு மெழுகில் சிலை வைப்பார்கள் என்றால், இந்த ரசிகர் இனிப்பாக சாக்லேட்டில் சிலை வைத்துள்ளார். மக்கள் ஆர்வமாக இந்த சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்களாம்.
மீசையை முறுக்கியபடி கம்பீரமாக, ஆனால் கருப்பாக இந்தச் சிலையில் காட்சி தருகிறார் அஜித். சாக்லேட்டில் அவ்வளவு தத்ரூபமாக அஜித்தின் உருவத்தை கொண்டு வர இயலவிலை என்றாலும், தன்னால் இயன்ற அளவு முயற்சித்திருக்கிறார் இந்த ரசிகர்.


Click it and Unblock the Notifications











