டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி.... பள்ளி பள்ளியாகச் சென்று டோக்கன் தரும் 'எழுமின் ' படக்குழு!
எழுமின் படம் பார்ப்பதற்காக 30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட் விலையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: எழுமின் படம் பார்ப்பதற்காக 30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட் விலையில் சிறப்பு சலுகை வழங்கப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.
வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் படம் 'எழுமின்'. நடிகர் விவேக், தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் உள்ளிட்டவர்களுடன் ,தற்காப்பு கலையில் நிபுணத்துவம் பெற்ற 6 சிறுவர் சிறுமிகளும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
[நல்ல வேளை நான் அந்த நடிகருடன் அவுட்டோர் ஷூட்டிங் போகவில்லை: நடிகை நிம்மதி]

விவேக் கோரிக்கை
அப்போது பேசிய நடிகர் விவேக், குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு வரும் பள்ளி மாணவர்களை சலுகை வழங்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் கேட்டார்.

தயாரிப்பாளர் வி.பி.விஜி
அதற்கு பதிலளித்த தயாரிப்பாளரும், இயக்குனருமான விஜி, தியேட்டருக்கு வரும் பள்ளி மாணவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

30 லட்சம் மாணவர்களுக்கு சலுகை
இதுகுறித்து வி.பி.விஜி பேசியதாவது,
"விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம்.

பள்ளிகளுக்கு டோக்கன்
இதற்காக நாங்கள் பள்ளிகளுக்கு சென்று டோக்கன் தர இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்' என்றார்.

பங்கேற்றவர்கள்
செய்தியாளர் சந்திப்பில், நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











