twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3டி, எஸ்ஆர்எல் 4டி, பாடி க்ளோவ்.. சும்மாவே ஷங்கர் டெக்னாலஜில பின்னுவாரு.. இதுல 2.0னா கேட்கவா வேணும்!

    2.0 படத்தில் பல புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    |

    Recommended Video

    2.0 பாக்க நீங்க ரெடியா?- வீடியோ

    சென்னை: ரஜினியின் 2.0 படத்தில் தொழில்நுட்ப ரீதியாக பல புதிய விசயங்களைச் செய்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

    பிரமாண்டத்தின் அடையாளம் இயக்குனர் ஷங்கர். ஜென்ட்டில்மேனில் ஆரம்பித்து இன்று வரை அவரது படங்களில் தொழில்நுட்ப ரீதியாக புதிய விஷயங்கள் பல இருக்கும்.

    ஒவ்வொரு படத்திற்கும் புதிது புதிதாக ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவார் ஷங்கர். உதாரணமாக காதலன் படத்தில் முக்காபுல்லா பாடல் வரும் கிராபிக்ஸ் காட்சியாகட்டும், முதல்வன் படத்தில் முதல்வனே பாடலில் மணிவண்ணன், வடிவேலு ரகுவரன் என எல்லோரையும் பாம்பாக மாற்றி பரமபதம் விளையாடியிருப்பார்.

    இதுபோல பாய்ஸ், அந்நியன் படங்களில் டைம் ப்ரீஸ் தொழில்நுட்பம், ஜீன்ஸ் படத்தில் மோஷன் கேப்ட்சர் என தமிழ் சினிமாவுக்கு ஷங்கர் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள் ஏராளம். ரசிகர்களை பிரம்மாண்டம் கூடவே தொழில்நுட்பம் என பிரம்மிக்க வைத்தவர் ஷங்கர்.

    இதற்கெல்லாம் உச்சமாக எந்திரன் படத்தில் ரஜினியை ரோபோவாக்கி லைக்ஸை அள்ளியவர். இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தொழில்நுட்ப உதவியுடன் செதுக்கியிருக்கிறார்.

    2.0 வில் அப்படி என்ன ஸ்பெஷல் என கேட்கிறீர்களா.... இதோ அந்த விபரம்:

    3டி :

    3டி :

    பொதுவாக 3டியில் வெளிவரும் படங்கள் எல்லாம், 2டி கேமராவில் படம்பிடிக்கப்பட்டு 3டியாக மாற்றப்படும். ஆனால் 2.0 படம் முழுவதுமே 3டியில் படமாக்கப்பட்டுள்ளது. இதனால் முப்பரிமாண தொழில்நுட்பத்தை மிகத்துல்லியமாக பார்த்து ரசிக்கலாம்.

    எஸ்.ஆர்.எல் 4டி:

    எஸ்.ஆர்.எல் 4டி:

    வீடியோ 3டி என்றால் ஆடியோ 4டி. ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி தான் இப்படத்திற்கு ஒலிக்கலவை செய்திருக்கிறார். பொதுவாக தியேட்டரில் நாம் படம் பார்க்கும் போது, முன்னும், பின்னும் மற்றும் வலது, இடது என நான்கு புறங்களில் இருந்து தான் ஒலி கேட்கும். ஆனால் இந்த படத்தில் சீட்டுக்கு அடியிலும் ஸ்பீக்கர்கள் இருக்கும். இந்த ஒலி புதுவித உணர்வுகளை ஏற்படுத்தும்.

    பாடி க்ளோவ்:

    பாடி க்ளோவ்:

    படத்தில் நடித்துள்ள ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் என அனைவருமே பாடி க்ளோவ் அணிந்து நடித்துள்ளனர். இதற்காக பிரத்யேகமாக மோல்டிங் எடுக்கப்பட்டு. எல்லா சீன்களுக்கும் தனித்தனியே பாடி க்ளோவ் உருவாக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான, எடை அதிகம் உள்ள இந்த பாடி க்ளோவ்களை போட்டுக்கொண்டு நடிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இதனை தத்ரூபமாக செய்துள்ளனர் அனைத்து நடிகர்களும். இந்த உணர்வு எப்படி இருக்கும் என்றால், அவஞ்சர்ஸ், ஐயர்ன் மேன் போன்ற படங்களுக்கு இணையாக இருக்கிறது 2.0.

    எந்திர மிரட்டல்:

    எந்திர மிரட்டல்:

    வழக்கம் போலவே இந்த படத்திலும் பாடல் காட்சிக்காகவும், படப்பிடிப்புக்காகவும் பிரமாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சின்ன சின்ன பூச்சிகள், தென்னை மரம், பறவைகள் என அனைத்துமே எந்திரத்தால் உருவாக்கி அதை வைத்து படம் பிடித்துள்ளனர். இதற்காக சென்னை பூந்தமல்லி அருகே ஒரு தொழிற்சாலை ஒன்றையே உருவாக்கினார்கள். படத்தில் இது மிக மிரட்டலாக இருக்கும் என்கின்றனர்.

    10 தியேட்டர்கள்

    10 தியேட்டர்கள்

    என்ன தான் ஷங்கர் ஏகப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தினாலும் அதை ரசிகர்கள் அனுபவிக்க வழி செய்வது தியேட்டர்கள் தானே. அதனால் தான் இந்தியாவில் மொத்தம் பத்து தியேட்டர்களில் இந்த தொழில்நுட்பங்களை அனுபவிக்கும் வகையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் சத்யம் மற்றும் ஜிகே திரையரங்குகளில் இந்த வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 2.0வை இந்த தியேட்டர்களில் பார்த்தால் தான் அதன் முழு உணர்வையும் அனுபவிக்க முடியும்.

    English summary
    Director Shankar has used many new technololgies in his Rajini starrer #.2point0.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X