புதுக்கோட்டைப் பெண்ணாக மாற, ஜோதிகாவுக்கு ஸ்பெஷல் மேக்கப்!
நடிகை ஜோதிகாவை, புதுக்கோட்டைப் பெண்ணாக மாற்ற, ஸ்பெஷல் மேக்கப் போடப்படுகிறது.
Recommended Video
சென்னை: ஜோதிகா மீண்டும் பிசியாகி விட்டார். புதுப் புதுப் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த 'ஜோ', இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்! அவர் கார்த்தியுடன் நடித்துள்ள 'தம்பி'ரிலீஸுக்கு ரெடியாகிவிட்ட நிலையில், அறிமுக இயக்குனர் பிரட்ரிக் இயக்கத்தில் நடிக்கும் 'பொன்மகள் வந்தாள்' ஷூட்டிங் நிறைவடைந்துவிட்டது.

உடனடியாக அடுத்தப் படத்தையும் ஆரம்பித்துவிட்டார் 'ஜோ'. இந்தப் படத்தை இயக்குகிறார், 'கத்துக்குட்டி' சரவணன்.
நடிகர் சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இதில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். சசிகுமார் ஜோடியாக ஜோதிகா நடிக்கிறார் என்று கூறப்பட்டது, முதலில். அதை மறுக்கும் படக்குழு அண்ணன் - தங்கை கதை என்கிறது.
''தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதியில நடக்கும் கதை இது. இதுவரை இப்படியொரு கேரக்டர்ல 'ஜோ'வை பார்த்திருக்க முடியாது. முதல்முறையா, பக்காவான ஒரு கிராமத்துக் கதையில நடிக்கிறாங்க. அச்சு அசலான புதுக்கோட்டை பெண்ணா அவங்களை
இதுல பார்க்கலாம். அவங்க லுக்கை அப்படியே மாத்தியிருக்கோம். இதுக்காக அவருக்கு ஸ்பெஷல் மேக்கப் போடறோம்'' என்கிறார்கள்.
காமெடி நடிகர் சூரிக்கு இதில் வேற லெவல் கேரக்டராம். 'இதுவரை பார்த்த சூரியை இதுல பார்க்க முடியாது. 'நாயகன்' படத்துல ஜனகராஜ் கேரக்டர் எப்படியோ, அது போல இதுல சூரிக்கு அழுத்தமான கேரக்டர். சென்டிமென்டா அசத்துவாப்ல'என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











