தங்கை மகனுடன் சிம்பு.. ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஸ்பெஷல் போட்டோ !
Recommended Video
சென்னை : நடிகர் சிம்பு தனது தங்கை மகனுடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் வளர்ந்து ஹீரோவாக தமிழ் சினிமாவை ஆண்ட திறமைசாலி தான் சிம்பு. சினிமாவில் நூற்றில் ஒருவருக்கு மட்டுமே இருக்கும் தனி திறமை சிம்புவிடம் இருக்கிறது. நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், பாடகர், எழுத்தாளர், நடன கலைஞர் போன்ற பன்முகம் கொண்டவர் தான் சிம்பு.

தனது அப்பா டி. ராஜேந்தர் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். உறவை காத்த கிளி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரம் நடித்தார் சிம்பு. சுமார் பன்னிரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாகவே நடித்துள்ளார் சிம்பு.
இதன் பின் ஹீரோவாக தனது அப்பா டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை என்ற படத்தில் நடித்தார் சிம்பு இதன் பின்னர் பல படங்களில் நடித்து பல வெற்றிகளை குவித்து வந்தார். இவரை அனைவரும் எஸ். டி. ஆர் என்று தான் அழைப்பார்கள்.
சிம்புவிற்கும் குழந்தைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடித்த போடா போடி திரைப்படத்தில் குழந்தை எவ்வளவு முக்கியம் என்று பலவற்றை கூறியிருப்பார்கள். மேலும், அப்படத்தில் வரும் குழந்தை பாடல் அதில் சிம்புவின் நடிப்பு பல அப்பாக்களின் வாழ்க்கையை காட்டியது.
தற்போது சிம்புவின் தங்கை இலக்கியாவின் குழந்தையுடன் சிம்பு இருப்பதை போன்ற ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது. சிம்பு எது செய்தாலும் ட்ரெண்ட் ஆவது வழக்கம் தான் இந்த முறை பாசத்தின் அடையாளமாக குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தாய் மாமன் தூக்குவது அவ்வளவு சந்தோஷமும் மகிழ்ச்சியும் ஏற்பட தான் செய்கிறது குழந்தைகளுக்கு. தமிழர்களில் வழக்க படி தாய் மாமன் என்ற உறவு மிக மிக அவசியமான மிக நெருக்கமான உன்னதமான உறவு. சிலருக்கு நல்ல தாய் மாமன்கள் அமைவதில்லை. பலருக்கு தாய் மாமன்களே இல்லை ஆனால் இலக்கியாவின் குழந்தைக்கு மிகவும் பாசமான திறமையான தாய்மாமன் அமைந்தது சிறப்போ சிறப்பு.


Click it and Unblock the Notifications











