ரஜினி வீட்டில் சிறப்பு பிரார்த்தனை செய்த பாதிரியார்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி அவரது வீட்டில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினி இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல்நலமில்லாமல் போய், சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொண்ட பிறகு இப்போது நலமுடன் உள்ளார்.
கோச்சடையான் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்போது அதிகமாக வெளிநிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. நெருக்கமான நண்பர்கள் வீடுகள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு மட்டும் போய் வருகிறார்.

திருப்பதி தரிசனம்
சமீபத்தில் அவர் தன் மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதி சென்று ஏழுமலையான தரிசித்துவிட்டு வந்தார். மனதுக்கு நிம்மதியாக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

பாதிரியார் சாமி தங்கையா
திருப்பதியிலிருந்து ரஜினி திரும்பிய மறுநாள் அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தார் கிறிஸ்தவ பாதிரியார் சாமி தங்கையா.

சிறப்பு பிரார்த்தனை
ரஜினியின் நெஞ்சில் கைவைத்து இறை ஆசிகூறி, சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். மிகுந்த பரவசத்துடன் அந்தப் பிரார்த்தனையின்போது காணப்பட்டார் ரஜினி.
அவருக்குள் விதைக்கப்பட்ட விதையான இறைவனின் ஆசியுடன் மேலும் மேலும் வளர்ந்து வளங்களைத் தரும் என பிரார்த்தனை செய்தார் சாமி தங்கையா.

சர்வமதங்களிலும்...
சர்வமதங்களிலும் நம்பிக்கை கொண்டவர் சூப்பர் ஸ்டார் என்பது தெரிந்த விஷயமே. முன்பு அவர் உடல் நிலை சரியில்லாத போது, சென்னை மருத்துவமனையிலிருந்து திருவான்மியூரில் உள்ள தேவாலயத்துக்குப் போய் அவர் பிரார்த்தனை செய்தது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications











