GOAT: மனச தொட்டுட்டீங்க தளபதி.. கோட் படத்தை யாருக்கு போட்டு காட்டியிருக்காங்கனு நீங்களே பாருங்க!

சென்னை: தளபதி விஜய் கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வெளியான படம் தி கோட். இந்தப் படம் இந்தியா மட்டும் இல்லாமல் 40க்கும் மேற்பட்ட வெளிநாடுகளிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தினை தமிழ்நாடு ரசிகர்கள் கொண்டாடினர். குறிப்பாக படத்தினைப் பார்த்த ரசிகர்கள் அழகிய தமிழ் மகன் படத்திற்குப் பின்னர் விஜய்யை நெகடிவ் கதாபாத்திரத்தில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர். படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோவாக நடித்திருந்தார். படம் கடந்த 3ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியானது. படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் தியேட்டரில் படம் இன்னும் ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் படத்தினை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புக் காட்சியாக படக்குழு திரையிட்டுள்ளது.

கோட் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். இப்படத்தில் இவருடன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெய்ராம், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, பிரேம் ஜி, வைபவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் படத்தில் கேமியோவாக நடித்துள்ளார். மட்ட பாடலுக்கு த்ரிஷா நடனமாடியுள்ளார்.

goat vijay thalapathy

இதுமட்டும் இல்லாமல் காதலின் தீபம் ஒன்று பாடல், படையப்பா தீம் மியூசிக் ரஜினி ரசிகர்களைக் கவரவும், குணா பட வசனம் கமல் ரசிகர்களைக் கவரவும், மங்காத்தா தீம் அஜித் ரசிகர்களைக் கவரவும், தூள் பட பாடல் விக்ரம் ரசிகர்களைக் கவரவும், மறைந்த நடிகர் விஜயகாந்த் கதாபாத்திரம் அவரது ரசிகர்களைக் கவரவும் படத்தில் இயல்பாகவே திரைக்கதையில் ஒரு காட்சியாக இடம் பெற்றது. இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸாக அமைந்தது.

goat vijay thalapathy

த்ரிஷா: படம் ரிலீஸ் ஆன தினத்தில் படத்தின் தயாயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நடிகை த்ரிஷாவுக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டிருந்தார். அந்த பதிவு வைரலானது. இந்நிலையில் நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடியது குறித்து பகிர்ந்திருந்தார். அதில், " கடந்த மார்ச் 5ஆம் தேதி எனக்கு பிடித்தவர்களுடன் நடந்த சிறிய குத்தாட்டாம்" என பதிவிட்டிருந்தார். மேலும் இந்தப் பதிவோடு சில புகைப்பட்டங்களையும், ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

goat vijay thalapathy

ஓடிடி: படம் கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. படம் 3 மணி நேரம் ஒரு நிமிடம். இதுதான் தற்போது நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் படம் நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது என நடிகர் பிரசாந்த் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் பேசும்போது, " என்னோட படம் கோட், நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிக் கொண்டு உள்ளது" எனக் கூறுகின்றார். இது விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பேற்றியது.

goat vijay thalapathy

சிறப்புக் காட்சி: இந்நிலையில், கோட் படக்குழு மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக பார்வை மாற்றுத்திறனாளிகளை தியேட்டருக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கென சிறப்புக் காட்சியாக கோட் படத்தினை படக்குழு திரையிட்டுள்ளது. படம் பார்த்த மாற்றுத்திறனாளிகள் படத்தினைப் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, படத்தின் ஆடியோ டிஸ்கிரிப்ஷன் மிகவும் சிறப்பாக உள்ளது என பார்வை மாற்றுத் திறனாளிகள் பாராட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

goat vijay thalapathy

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X