twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொங்கலுக்கு திரையரங்குகளில் 5 ஷோ காட்ட அனுமதி!

    By Sudha
    |

    பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

    இது குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.

    மேலும் தமிழக அரசின் அரசாணையின்படி வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.

    அதுபோல் நடமாடும் திரையரங்குகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மேட்னி காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் மற்றும் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை காலை காட்சிகள் நடத்திக் கொள்வதற்கும் அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

    மாவட்ட ஆட்சியர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன் கூட்டியே இதுபற்றிய தகவல் தெரிவித்து விட்டு அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரி விக்கப்பட்டு உள்ளது.

    எனவே தமிழக அரசின் அரசாணைப்படி அதிகப்படியான காட்சிகள் அதாவது ஐந்தாவது காட்சிகள் நடத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    The Tamil Nadu Theater owners association announced that the govt of Tamil Nadu gave spermission to run special shows in theaters all over the state during pongal holydays.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X