ரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு!

ரஜினி 168 படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷும், அஜித் 60 படத்தில் நயன்தாராவும் ஹீரோயின்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Thalaivar 168 update:மீண்டும் இணையும் தலைவர் & Sun Pictures

சென்னை: ரஜினி 168 ஹீரோயின், அஜித் 60 ஹீரோயின், விஜய் 64 ஹீரோயின் படங்களின் ஹீரோயின்கள் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதையடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனர் எச்.வினோத்தின் இயக்கதில் மீண்டும் நடிக்கிறார் அஜித். அதேபோல் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய்.

யார் ஹீரோயின்

யார் ஹீரோயின்

தமிழ் சினிமாவின் மூன்று மாஸ் ஹீரோக்களின் படங்களும் ஒரே சமயத்தில் ஷூட்டிங் செல்ல இருக்கின்றன. இந்த படங்களில் இவர்களுக்கு யார் ஜோடியாக நடிக்கப் போகிறார்கள் எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோலிவுட்டில் சில தகவல்கள் உலா வருகின்றன.

ரஜினி 168 ஹீரோயின்

ரஜினி 168 ஹீரோயின்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் வீரம், விஸ்வாசம் போன்று ஒரு கிராமத்து குடும்ப ஆக்ஷன் படமாகும். இதில் நடிக்க ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு ஜோடியாக ஜோதிகாவும், மற்றொரு நாயகியாக கீர்த்தி சுரேஷும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தல 60 ஹீரோயின்

தல 60 ஹீரோயின்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். அதேபோன்று தல 60ல் யாராவது ஒரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்கலாம் என தயாரிப்பாளர் தரப்பில் ஆலோசனை கூறப்பட்டதாம். ஆனால் நயன்தாராவை ஒப்பந்தம் செய்யும்படி அஜித் தரப்பில் ஸ்டிரிக்ட் உத்தரவு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தளபதி 64 ஹீரோயின்

தளபதி 64 ஹீரோயின்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். எனவே அடுத்தப் படத்தில் வேறு யாரையாவது புதிதாக களமிறக்க வேண்டும் என படக்குழு யோசித்து வருகிறது. அனு இமானுவேல், ராஷி கண்ணா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X