Spider-Man: Brand New Day: கதி கலங்கப்போகும் ஹாலிவுட்.. ரெக்கார்டு படைக்கப்போகும் ஸ்பைடர் மேன் வசூல்

சென்னை: ஹாலிவுட்டில் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் எது என்று கேட்டால், பெரும்பாலான ரசிகர்களின் பதில் 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' என்பதுதான். டாம் ஹாலண்ட் மீண்டும் ஸ்பைடர்மேனாக களமிறங்கியுள்ள இந்த படம் உலகம் முழுவதும் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அட்வான்ஸ் புக்கிங்கிலேயே புதிய சாதனைகளை படைத்து வருகிறது.

ஏற்கனவே வெளியான டிரெய்லர், டாம் ஹாலண்ட் - ஜெண்டயா ஜோடியின் புரமோஷன், மார்வெல் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு என பல காரணங்களால் இந்த படத்தின் மீது உலகம் முழுவதும் செம்ம ஹைப் உருவாகியுள்ளது. இதன் காரணமாக, வெளியாகும் நாளுக்கு முன்பே பல நாடுகளில் டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன.

எந்த நாடுகளில் அதிக வரவேற்பு?: தற்போதைய அட்வான்ஸ் புக்கிங் நிலவரப்படி, அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. முதல் நாள் டிக்கெட் விற்பனையிலேயே கடந்த சில ஆண்டுகளில் வெளியான ஹாலிவுட் படங்களின் சாதனைகளை இந்த படம் முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Spider-Man Brand New Day Advance Booking Shatters Records Can Tom Holland s Film Beat Endgame

அதற்கு அடுத்தபடியாக சீனா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிலும் முன்பதிவு மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மார்வெல் படங்களுக்கு எப்போதும் பெரிய மார்க்கெட்டாக இருக்கும் இந்த நாடுகளில், முதல் நாள் மற்றும் முதல் வார இறுதி காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலும் அதிரடி: உலக அளவில் பேசப்படும் இந்த ஹைப், இந்தியாவிலும் அதே வேகத்தில் தொடர்கிறது. குறிப்பாக மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் IMAX, 4DX மற்றும் பிரீமியம் திரையரங்குகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்றுத் தீர்ந்து வருகின்றன.

சில திரையரங்குகளில் ₹2,000 வரை விலை நிர்ணயிக்கப்பட்ட டிக்கெட்டுகளும் ரசிகர்களால் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரணமாக இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாக இருந்தாலும், இந்த முறை அதையும் தாண்டிய அளவுக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Spider-Man Brand New Day Advance Booking Shatters Records Can Tom Holland s Film Beat Endgame

ஓப்பனிங்கிலேயே புதிய சாதனையா?: இந்தியாவில் மட்டும் பல லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்பனையாகி விட்டதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலை பதிவு செய்யும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதே வேகம் தொடர்ந்தால், இந்தியாவில் ஹாலிவுட் படங்களுக்கான பல முன்பதிவு சாதனைகள் முறியடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், உலகளவில் 800 மில்லியன் டாலருக்கும் அதிகமான ஓப்பனிங் வீக்கெண்ட் வசூலை படம் எட்டக்கூடும் என்ற கணிப்புகளும் வெளியாகியுள்ளன. அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 77 ஆயிரம் கோடி ஆகும். இந்த வசூலை முதல் வாரத்தில் எட்டினால் ஹாலிவுட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற திரைப்படங்களில் ஒன்றாக 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' இடம்பிடிக்கும்.

எண்ட்கேம் சாதனையை நெருங்குமா?: இந்தியாவில் Spider-Man: No Way Home, Avatar: The Way of Water உள்ளிட்ட படங்களின் முன்பதிவு சாதனைகளை முறியடிக்கும் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த படம், தற்போது 'Avengers: Endgame' படத்தின் சாதனையையும் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இறுதி கட்ட முன்பதிவு முடிவில் புதிய வரலாறு படைக்குமா? உலக பாக்ஸ் ஆபீஸை மீண்டும் மார்வெல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமா? என்பதற்கான பதில் இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X