இந்திய ரசிகர்களை 50 நாட்களாக கட்டிப்போட்ட ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்... வசூலிலும் சாதனை

சென்னை : ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் உலகளவில் தற்போது 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

Recommended Video

Spider-Man: No Way Home Movie Review in Tamil | Yessa? Bussa? |Tom Holland | Filmibeat Tamil

இந்தியாவிலும் ரசிகர்களை கடந்த 50 நாட்களாக கட்டிப் போட்டு வருகிறது.

வசூலிலும் இந்தப் படம் உலகளவில் மட்டுமின்றி இந்தியாவிலும் நம்பர் ஒன் சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஹாலிவுட் பட ரசிகர்கள்

ஹாலிவுட் பட ரசிகர்கள்

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதுமே இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அதன் பிரம்மாண்டம் அதிகளவில் நமது இந்திய படங்களில் கிடைப்பதில்லை. ஒரு சில இயக்குநர்களே பிரம்மாண்டத்தை நோக்கி படையெடுக்கும் நிலையில் பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு ஹாலிவுட்டையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம்

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம்

அந்த வகையில் கடந்த டிசம்பர் 16ம் தேதி இந்தியாவெங்கும் திரையரங்குகளில் ரிலீசான ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம் இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்க்கும் அனுபவம் ரசிகர்களை கட்டிப் போட்டு வருகிறது.

50 நாட்களை கடந்து சாதனை

50 நாட்களை கடந்து சாதனை

படம் தற்போது வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. டாம் ஹாலண்ட் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் பழைய வில்லன்கள் அனைவரும் வெளிப்படுவதும், அவர்களை சமாளித்து வெளிவருவதும் என்று சாதாரண கதைக்கருவையே படம் கொண்டிருந்தாலும் மிரட்டலான பின்பாதி ரசிகர்களை வெகுவாக உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

கொண்டாட்ட அனுபவம்

கொண்டாட்ட அனுபவம்

பொதுவாக மார்வெல் படங்களில் இருக்கும் நகைச்சுவையும் இந்தப் படத்தில் அதிகமாக காணப்படுவதும் ரசிகர்களுக்கு சிறப்பான மற்றும் கொண்டாட்ட அனுபவத்தை கொடுத்துள்ளது. வழக்கமான சூப்பர் ஹீரோ கதையை எடுத்துக் கொண்டு அதை சிறப்பாக கொடுத்துள்ளார்.

மிரட்டலான 2வது பகுதி

மிரட்டலான 2வது பகுதி

முதல் பாதி சாதாரணமாக வசனங்களிலேயே கழிந்துவிடும் நிலையில், அதை ஈடுகட்டும் வகையில் இரண்டாவது பாதியை ரசிகர்களின் எதிர்பார்ப்பை கடந்து கொடுத்துள்ளார் இயக்குநர். இடைவேளைக்கு பிறகு தொடர்ந்து விறுவிறுப்பான திரைக்கதையில் படம் ரசிகர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொள்கிறது.

இந்தியாவில் வசூல் சாதனை

இந்தியாவில் வசூல் சாதனை

இந்நிலையில் படம் வெளியாகி 50 நாட்களை இந்தியாவில் கடந்துள்ளது. தொடர்ந்து படம் சிறப்பாக ஓடி வருகிறது. வசூல்சாதனையையும் புரிந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் மட்டுமே வசூலில் 300 கோடி ரூபாயை எட்டவுள்ளது. அமெரிக்காவில் 1.2 லட்சம் கோடியை இந்தப் படம் வசூல் செய்துள்ளது. இதேபோல அமெரிக்கா தவிர்த்த மற்ற நாடுகளில் 7.4 ஆயிரம் கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X