அதிக வசூலை குவித்து வரும் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்... உலகளவில் 12வது படம்!
நியூயார்க் :டிசம்பர் 16ம் தேதி இந்தியா முழுவதும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம்.
Recommended Video
இந்தப் படத்தில் முந்தைய பாகங்களில் நடித்த டாம் ஹாலண்ட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது.

ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம்
சர்வதேச அளவில் 3வது வாரத்தை கடந்த ஓடி வருகிறது ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படம். இந்தியாவில் தமிழ், தெலுங்கு உளிளட்ட மொழிகளில் கடந்த மாதம் 16ம் தேதி வெளியான இந்தப் படம் வழக்கம்போல ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படமாக அமைந்துள்ளது.

டாக்டர் ஆக்டோபஸ் மிரட்டலான நடிப்பு
படத்தில் முந்தைய பாகங்களில் நடித்துள்ள டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமீ உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். டாக்டர் ஆக்டோபஸ் மிரட்டலாக நடித்துள்ளார். ரசிகர்களை குறிப்பாக இளம் ரசிகர்களை இந்தப் படம் வெகுவாக கவர்ந்துள்ளது.

உலகளவில் ரூ.10,200 கோடி வசூல்
படம் வெளியான முதல் நாளிலேயே வசூல் மழையை பொழிந்தது. 10 நாட்ளில் 6,000 கோடியை வசூல் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது 3வது வாரத்தை படம் கடந்துள்ள நிலையில் உலகளவில் 10,200 கோடியை வசூல் செய்துள்ளது. உலகளவில் அதிக வசூலை ஈட்டியுள்ள 12வது படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.

சீனாவில் 14ம் தேதி ரிலீஸ்
தென் அமெரிக்காவில் மட்டும் படம் 610 மில்லியன் டாலர் வசூலையும் மற்ற இடங்களில் 760 மில்லியன் டாலர் வசூலையும் பெற்றுள்ளது. படம் சீனாவில் வரும் 14ம் தேதிதான் ரிலீசாக உள்ளது. இதையடுத்து படத்தின் வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ரூ.260 கோடி வசூல்
இதேபோல இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் படம் ரிலீசாகியுள்ள நிலையில் 18 நாட்களில் 260 கோடி ரூபாயை வசூலித்து இந்திய பாக்ஸ் ஆபிசில் இந்த ஆண்டில் அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்ற சாதனையை புரிந்துள்ளது. மேலும் இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களில் அதிக வசூலை ஈட்டியுள்ள 3வது படம் என்ற சிறப்பும் படத்திற்கு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











