For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நான் பார்த்த இந்திப் படங்களில் '3 இடியட்ஸ்'தான் பெஸ்ட்! - ஸ்பீல்பெர்க்

  By Shankar
  |

  இந்தியப் படங்களில் மிகச் சிலவற்றைத்தான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்தவற்றில் பெஸ்ட் 3 இடியட்ஸ்தான் என்கிறார் ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

  66 வயதாகும் ஸ்பீல்பெர்க், இரு முறை ஆஸ்கர் விருது வென்றவர். சமீபத்தில் வெளியான அவரது லிங்கன் படம் ஆஸ்கர் விருது வென்றதைக் கொண்டாட இந்தியா வந்துள்ளார். அவரை இந்திய சினிமா இயக்குநர்கள் பலரும் நேரில் சந்தித்துப் பேசி, அவரது அனுபவங்களைக் கேட்டு வந்தனர்.

  ஸ்பீல்பெர்க்கின் சிறப்புப் பேட்டியை இன்று வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ். அதிலிருந்து சில பகுதிகள்...

  டின் டின் அடுத்த பாகம் எப்போ?

  டின் டின் அடுத்த பாகம் எப்போ?

  டின் டின் முதல் பாகத்தைத்தான் நான் இயக்கினேன். அடுத்த பாகத்தை நான் இயக்கவில்லை. பீட்டர் ஜாக்ஸன் இயக்குகிறார். 2015 கிறிஸ்துமஸ் நாளில் அந்தப் படத்தை வெளியிடப் போகிறோம். இந்தப் படத்தையும் ஒரு புத்தகத்தைத் தழுவித்தான் எடுக்கிறோம். ஆனால் அது என்ன புத்தகம் என்று இப்போது சொல்ல முடியாது.

  மீண்டும் இந்தியானா ஜோன்ஸ்...?

  மீண்டும் இந்தியானா ஜோன்ஸ்...?

  ஆமாம்.. இந்தியானா ஜோன்ஸின் 5வது பாகத்தை நான் இயக்கத் திட்டமிட்டுள்ளேன். தயாரிப்பாளர் ஜார்ஜ் லூகாஸ் இப்போது ஓய்வை அறிவித்துவிட்டார். ஆனாலும் அவரது அறிவிப்பு இந்தியானா ஜோன்ஸின் அடுத்த பாகத்தைத் தயாரிக்க தடையாக இருக்காது என நம்புகிறேன். ஹாரிஸன் போர்டுதான் இதிலும் நடிப்பார்.

  பாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டம்?

  பாலிவுட் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றத் திட்டம்?

  தெரியவில்லை. அதற்கேற்ற பக்காவான ஸ்க்ரிப்ட் வேண்டும். அப்படி ஒரு ஸ்க்ரிப்ட் அமைந்தால், பாலிவுட்டில் பணியாற்றுவதை அருமையான வாய்ப்பாகக் கருதுகிறேன்.

  பாலிவுட் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?

  பாலிவுட் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?

  அவ்வளவாக இல்லை. சில படங்கள் பார்த்திருக்கிறேன். நிறைய படங்களின் க்ளிப்களைப் பார்த்துள்ளேன். சுவாரஸ்யமாக இருக்கும். குறிப்பாக சத்யஜித் ரே, ராஜ் கபூர் படங்கள். ஆவாரா எனக்கு ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில் என்றால், 3 இடியட்ஸ். நான் பார்த்தவற்றில் பெஸ்ட்.

  அமிதாப்பின் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

  அமிதாப்பின் படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?

  ஆம்... அவர் இந்தியாவில் ஒரு லெஜன்ட் மட்டுமல்ல... அமெரிக்காவிலும் அந்த சாதனையைப் படைக்க வல்லவர். என் நண்பர் பஸ் லூர்மானின் தி கிரேட் கட்ஸ்பி படத்தில் அவர் இப்போது நடித்து வருகிறார். அதன் சில காட்சிகளைப் பார்த்திருக்கிறேன்.

  அமெரிக்க அடிமை முறை பற்றி படமெடுக்கக் காரணம்..?

  அமெரிக்க அடிமை முறை பற்றி படமெடுக்கக் காரணம்..?

  பணம், அதிகாரம் போன்றவற்றை வைத்துக் கொண்டு, ஒரு குழு பெரும்பான்மை மனிதர்களை அடிமையாக வைத்திருக்கும் நிலையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. சிறு வயதில் இந்தக் கொடுமையை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன். அப்போது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் வளர வளர என் மனம் பட்ட பாடு கொஞ்சமல்ல. மனித இயல்பு குறித்து பெரிய குழப்பமே வந்துவிட்டது.

  அதனால்தான் என் படங்களில் அதிகமாக அடிமைத்தனத்துக்கு எதிரான காட்சிகள் இருக்கும். ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் எடுத்தது கூட அதனால்தான்.

  ஹாலிவுட்டில் ஏற்பட்ட மந்த நிலையால் பாதிக்கப்பட்டீர்களா?

  ஹாலிவுட்டில் ஏற்பட்ட மந்த நிலையால் பாதிக்கப்பட்டீர்களா?

  2008-ல் பெரிய தேக்க நிலை வந்தது. மக்கள் சில விஷயங்களை தியாகம் செய்தே தீர வேண்டிய நிலை. அதில் சினிமாவும் ஒன்றாகிவிட்டது. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கிட்டத்தட்ட அனைத்துப் படங்களையுமே 3 டியில் பார்க்க விரும்புகிறார்கள். அதுபோன்ற படங்கள்தான் இப்போது எடுக்கப்படுகின்றன.

  செல்போன் - சமூக வலைத்தளங்கள்..

  செல்போன் - சமூக வலைத்தளங்கள்..

  ஆனால் நாம் மறக்கக் கூடாத ஒருவிஷயம்... சோஷியல் மீடியாக்கள் ஒரு படத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போதே விமர்சனம் எழுதிவிடுவதுதான். செல்போன், சோஷியல் மீடியா, ஸ்கைப்பில்தான் இன்றைக்கு நிறைய இளைஞர்கள் அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள்.

  நல்ல படமாக இருந்தால், பட படவென இளைஞர்கள் தகவல்களை எஸ்எம்எஸ்ஸாக, ஸ்டேடஸாக தட்டிவிடுகிறார்கள். அந்தப் படம் நிற்கிறது. ஜெயிக்கிறது. படம் சரியில்லை என்றால் அடுத்த நொடியில் உலகம் முழுக்க தெரிந்துவிடுகிறது. பாக்ஸ் ஆபீஸில் படுத்துவிடுகிறது. எவ்வளவு வேகமாக இளைஞர்களின் விரல்கள் டைப் செய்கின்றன என்பதைப் பொருத்து படத்தின் ரிசல்ட் அமைகிறது.

  தயாரிப்பாளர் - இயக்குநர்..

  தயாரிப்பாளர் - இயக்குநர்..

  ஒரு படத்தை இயக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், நான் அதை முடிக்கும் வரை வேறு விஷயங்களுக்குப் போக மாட்டேன். ஆனால் தயாரிப்பு என்பது வேறு. ஒரு படத்தை தயாரிக்கும்போது பெரும்பாலும் அதன் இயக்குநருடைய முடிவுக்கே விட்டுவிடுவேன். எப்போதாவது என் ஆலோசனையை சொல்வேன். அதை ஏற்காவிட்டாலும் கவலைப்பட மாட்டேன். காரணம், என்னை விட அந்த இயக்குநருக்கு தன் படம் மீது அதிக அக்கறை இருக்கும் அல்லவா..!

  English summary
  Hollywood legend Steven Spielberg rates 3 Idiots is the best among the Bollywood movies which he watched.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X