பிரம்மாஸ்திரா, பொன்னியின் செல்வன், காந்தாரா, கார்த்திகேயா 2 - தேசிய விருதுகளில் பக்தி ஆதிக்கம்!

சென்னை: 2022ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. அதே போல, கோலிவுட், டோலிவுட் மற்றும் கன்னட திரையுலகம் என அனைத்து இடங்களிலும் பக்தி சம்பந்தப்பட்ட படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழில் 2022ம் ஆண்டு சாய் பல்லவி நடித்த கார்கி, சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு, கமல்ஹாசனின் விக்ரம், லவ் டுடே, விஜய் சேதுபதியின் மாமனிதன் உள்ளிட்ட பல படங்கள் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றன.

National Awards Brahmastra Ponniyin Selvan


அந்த ஆண்டு லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தை விட மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியை பெற்ற நிலையில், தேசிய விருதுகளையும் வென்று காட்டியுள்ளது.

பிரம்மாஸ்திரா: அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மெளனி ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான பிரம்மாஸ்திரா திரைப்படம் 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. சிவபெருமானின் கதையாகவும் சக்தி அஸ்திரங்கள் என இந்துக்களின் புராண கதையை மையப்படுத்திய படமாக உருவான அந்த படத்துக்கு சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

கார்த்திகேயா 2: மேஜர், பீம்லா நாயக், யசோதா, ஹிட் தி செகண்ட் கேஸ் உள்ளிட்ட தெலுங்கு படங்களுடன் வெளியான கார்த்திகேயா 2 திரைப்படத்துக்கு சிறந்த தெலுங்கு படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. கிருஷ்ணரை பற்றிய ஆராய்ச்சிப் படமாக உருவான அந்த படத்தில் நிகில் சித்தார்த்தா, அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காந்தாரா: கிருஷ்ணரின் வராக ரூபத்தை கடவுளாக வணங்கும் மக்களின் வாழ்வியல் படமாக உருவான காந்தாரா படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. அந்த படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நாயகனுக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன்: தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜ ராஜ சோழனின் புனைவு கதையான பொன்னியின் செல்வன் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரபு உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒளிப்பதிவு ரவிவர்மனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சிற்றம்பலம்: பொன்னியின் செல்வன் படத்தைத் தாண்டி தனுஷ், நித்யா மேனன், ராஷி கன்னா, பிரியா பவானி சங்கர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்துக்கும் 2 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திருச்சிற்றம்பலம் படத்தின் பெயரிலும் பக்தி மணம் கமழ்வது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் முதல் கோலிவுட் வரை பக்தி படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளதாக சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் விமர்சனங்களை கிளப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X