உதயநிதியிடமிருந்து விலகினார் எஸ்.ஆர். பிரபாகரன்... அடுத்த படம் அறிவிப்பு!

By Shankar

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களைத் தந்த எஸ் ஆர் பிரபாகரன், தன் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்குச் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

சுந்தரபாண்டியனுக்குப் பிறகு, உதயநிதி - நயன்தாராவை வைத்து இது கதிர்வேலன் காதல் படத்தை இயக்கினார் எஸ் ஆர் பிரபாகரன்.

Split in SR Prabhakaran - Udhayanidhi partnership

இந்தப் படம் வெளியான பிறகு, மீண்டும் உதயநிதி - எஸ் ஆர் பிரபாகரன் இணைந்து படம் பண்ணப் போவதாக அறிவித்தனர். இந்தப் படத்தில் லட்சுமி மேனன் உதயநிதிக்கு ஜோடியாக ஒப்பந்தமானார். இந்தப் படத்துக்காக தனது தேதிகளை மொத்தமாக ஒதுக்கிக் கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் எஸ் ஆர் பிரபாகரன், உதயநிதி படத்திலிருந்து விலகியுள்ளார். கதை விஷயத்தில் இருவருக்கும் இணக்கமான சூழல் உருவாகாததால் இந்த பிரிவு என்று கூறப்படுகிறது.

இப்போது, தன் அடுத்த படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு செய்யப் போவதாகவும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பிற விவரங்களை விரைவில் அறிவிப்பதாகவும் எஸ் ஆர் பிரபாகரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X