ஸ்பாய்லர் அலர்ட்.. சிங்கப்பெண்ணே பாடலில் இந்த பிரபலம் தான் என்ட்ரி!

சிங்கப்பெண்ணே பாடலில் விஜய்யுடன் சில பிரபலங்கள் ஒரு குறிப்பிட்ட காட்சியில் தோன்றி ஆடியுள்ளனர். அவர்கள் யார் என்பது தற்போது ஸ்க்ரீன் ஷாட்டுகளாகவும், வீடியோ க்ளிப்புகளாகவும் இணையத்தில் பரவி வருகின்றன.

Recommended Video

Bigil movie review | பிகில் படம் எப்படி இருக்கு ?

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

பிகில் படத்திற்கு போட்டியாக வெளியாகியுள்ள கார்த்தியின் கைதி திரைப்படமும் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

சிங்கப்பெண்ணே பாடலில் விஜய்யுடன் சில முக்கிய பிரபலங்கள் சில காட்சிகளுக்கு ஆடியுள்ளனர்.

மிரட்டும் விசுவல்ஸ்

மிரட்டும் விசுவல்ஸ்

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய்யின் பிகில் படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ள ஜி.கே. விஷ்ணு ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனது கை வண்ணத்தை காட்டியுள்ளார். வெறித்தனம் பாடல் மற்றும் சிங்கபெண்ணே பாடலில் வரும் விசுவல்ஸ் விஷ்ணுவின் வித்தைகளை காட்டியுள்ளது. அதேபோல ஃபுட்பால் கிரவுண்டிலும் ஏகப்பட்ட கோணத்தல் காட்சிகளை அமைத்து ரசிக்க வைத்துள்ளார்.

கருணை

கருணை

எடிட்டர் ரூபன் இன்னும் கொஞ்சம் கருணை காட்டாமல் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம். 2 மணி நேரம் 59 நிமிட படம் என்பது சில நேரங்களில் சலிப்பை தட்டுகிறது. நயன்தாராவுடன் விஜய் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அதற்கு இருவரும் பேசும் ஸ்லாங் தான் காரணம் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

சிங்கப்பெண்ணே சர்ப்ரைஸ்

சிங்கப்பெண்ணே சர்ப்ரைஸ்

பிகில் படத்தை இதுவரை பார்க்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். ஏனென்றால் இது ஒரு ஸ்பாய்லர் அலர்ட். இணையத்தில் இதன் ஸ்க்ரீன் ஷாட்டுகள் மற்றும் வீடியோ க்ளிப்புகள் வைரலாகி வருவதால், நாங்கள் இதை இங்கே ரிவீல் செய்கிறோம். சிங்க பெண்ணே பாடலில் சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுப்பது இயக்குநர் அட்லி மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தான்.

குருநாதரை போல

குருநாதரை போல

இயக்குநர் அட்லி தனது குருநாதர் ஷங்கரை போல முதன் முதலாக பாடலின் போது ஸ்க்ரீனில் தோன்ற ஆரம்பித்துவிட்டார். சிங்கபெண்ணே பாடல் வரலாற்றில் இடம்பிடிக்கும் என நம்பியுள்ள அட்லி, அதில் தானும் இருக்கவேண்டும் என்ற ஆசையில் தோன்றி நடித்துள்ளார். இதற்கு முன் வெளியான எந்த அட்லி படத்திலும் அவர் என்ட்ரி கொடுத்தது இல்லை.

More from Filmibeat

Read more about: bigil fdfs பிகில்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X