பாக்.ல் வாழும் ஷாரூக்,சல்மானின் ‘போட்டோகாப்பி’ ஆண்கள்: குவியும் பட வாய்ப்புகள்
இஸ்லாமாபாத்: நாம் இங்கே சல்மானும், ஷாரூக்கும் சந்தித்துக் கொண்டதையே பெரும் சர்ப்ரைசாக பேசிக் கொண்டிருக்க, அதை விட பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார்கள் பாகிஸ்தான் சினிமாக்காரர்கள்.
அச்சு அசலாக நம்மூர் ஷாரூக் மற்றும் சல்மான் போலிருக்கும் இருவரை விரைவில் தங்களது படங்களில் அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட அவர்களின் புகைப்படங்களைப் பார்த்து ஷாரூக் மற்றும் சல்மான் ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள்.
காரணம் அவர்கள் இருவரும் அச்சு அசலாக ஷாரூக் மற்றும் சல்மானின் போட்டோகாப்பிகள் போலிருந்தது தான். இதோ, நீங்களும் பார்த்து கொஞ்சம் அசந்து போங்களேன்...

நல்லா ஏமாந்தீங்களா..?
டக்கெனப் பார்த்ததும் சல்மான் கான் என நினைத்து விட்டீர்களா... இல்லை இவர் பெயர் ஹஸ்னைன் சலீம்.

நடை... உடை... பாவனை
ஹஸ்னைன் சலீமின் பேச்சு, நடை ,உடை, பாவனைகள் கூட சல்மானை நினைவு படுத்துவதாகவே அமைந்துள்ளது இவரது கூடுதல் சிறப்பு.

வரிசை கட்டி நிக்குறாங்களாம்.....
சல்மான் மாதிரி இருப்பதால் இப்போதே இவருக்கு ரசிகப் பட்டாளம் அதிகரித்து விட்டதாம். படத்தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இவருக்கு வாய்ப்பு தர வரிசையில் நிற்கிறார்களாம்.

இவரு ஷாரூக் போட்டோகாப்பி...
அசப்பில் ஷாரூக்கை நினைவூட்டும் இவரது பெயர் முகம்மது உமர் மாலிக். இவரும் பாகிஸ்தான் வாசி தான்.

ரசிகர் பட்டாளம்....
முகம்மதுவையும் கொத்திச் செல்ல படத்தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

கொஞ்ச வயசு....
சிறுவயது சல்மான் மற்றும் ஷாரூக்கை நினைவூட்டுவதால், பாகிஸ்தான் சினிமாவில் இவர்களது மார்கெட் வேல்யூ அதிகமாகவே காணப் படுகிறதாம்.

பெயரும் போட்டோகாப்பியா....
விரைவில் பாகிஸ்தான் படங்களில் இவர்களது பெயர்களை ஹீரோக்கள் பட்டியலில் பார்க்கலாம். ஷாரூக் மற்றும் சல்மானின் போட்டோ காப்பி போல இருக்கும் இவர்களுக்கு என்ன சினிமாப் பெயர் வைக்கலாம் என ரூம் போட்டு யோசித்து வருகிறார்களாம் பாகிஸ்தானில்.

பாகிஸ்தான் நடிகர்கள்...
பொதுவாக ஹீரோவுக்கு டூப் போடத்தான், அவரைப் போன்றே சாயல் உள்ள ஆட்களைத் தேடுவார்கள். ஆனால், இந்திய ஹீரோக்கள் போலவே அச்சு அசலாக ஆண்கள் கிடைத்திருப்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம் தான். அதிலும் அவர்கள் பாகிஸ்தான் வாசிகள் என்பது தான் கூடுதல் சுவாரஸ்யமே....


Click it and Unblock the Notifications











