மும்பையில் செம பார்ட்டி: பாரிஸ் ஹில்டனுக்கு வைர நெக்லஸை மாட்டி விட்ட சல்மான் கான்
மும்பை: அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் பாரிஸ் ஹில்டன் மும்பையில் பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் பாரிஸ் ஹில்டன் திங்கட்கிழமை இந்தியா வந்தார். புனேவுக்கு வந்த அவர் மும்பை சென்று பாலிவுட் நடிகர் சல்மான் கானுடன் பார்ட்டிக்கு சென்றார். அது பாரிஸுக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட பார்ட்டி.
திங்கட்கிழமை நடந்த பார்ட்டி பாரிஸுக்கு மிகவும் பிடித்துள்ளது.

சல்மான்
பார்ட்டியில் சல்மான் கான் பாரிஸ் ஹில்டனுக்கு வைர நெக்லஸ் ஒன்றை பரிசாக அளித்தார் இல்லை இல்லை கழுத்தில் மாட்டிவிட்டார்.

பாரிஸ்
தனக்கு வைர நெக்லஸ் பரிசளித்த சல்மான் கானுக்கு பாரிஸ் ஹில்டன் நன்றி தெரிவித்துள்ளார்.

கருப்பு
பார்ட்டியில் சல்மானும், பாரிஸ் ஹில்டனும் சொல்லி வைத்தது போன்று கருப்பு நிற உடையில் வந்திருந்தனர்.

ரித்திக்
முன்னதாக பாரிஸ் ஹில்டன் நடிகர் ரித்திக் ரோஷனை புகழ்ந்து தள்ளியதுடன் அவருடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











