Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
உலகை கட்டிப்போட்ட..“Squid Game” சீசன் 2 டீசர் வெளியானது.. குஷியில் ரசிகர்கள் !
வாஷிங்டன் : உலகம் முழுக்க ஓடிடி தளத்தில் அதிக பேரால் பார்க்கப்பட்ட 'ஸ்க்விட் கேம்' வெப் சீரிஸின் சீசன் 2 குறித்த அட்டகாசமான தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
கொரிய இயக்குநர் ஹ்வாங் டாங் ஹியூக் இயக்கத்தில் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் 'ஸ்க்விட் கேம் வெப் சீரிஸ் வெளியானது. விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸ் வெளியான சில தினங்களிலேயே சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்றது.
நினைத்துக்கூட பார்க்க முடியாத ட்விஸ்டுகள், எபிசோடுக்கு எபிசோடு விறுவிறுப்பு க்ளைமாக்ஸ் ட்விஸ்டுகள் ஸ்க்விட் கேம் பார்வையாளர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்தத் தொடரை தற்போது வரை 16 கோடிக்கும் அதிமானவர்கள் பார்த்துள்ளதாக நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
10 நாட்களில் இவ்வளவு கலெக்ஷனா.. கமலே எதிர்பார்க்காத வெற்றி.. சாத்தியமாக்கிய ரசிகர்கள்!

ஸ்க்விட் கேம்'
ஒன்பது எபிசோடுகளைக் கொண்ட இந்த வெப் தொடரில், ஒவ்வொரு எபிசோடுக்கும் 18 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 'ஸ்க்விட் கேம் ' தொடருக்கான மொத்த செலவு சுமார் 180 கோடி ரூபாயாகும். ஆனால், அந்தத் தொடருக்கு சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பால் 6700 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டியுள்ளது.

பிரபலமான தொடர்
ஸ்க்விட் கேம், வெளியான முதல் 28 நாட்களில் 142 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் மிகவும் பிரபலமான நெட்ஃபிக்ஸ் தொடராக மாறியது. இது 2021 ஆம் ஆண்டின் Q3 இல் 4.38 மில்லியன் பெற்ற Netflix இன் சந்தாதாரர் எண்ணிக்கையில் ஏற்றத்திற்கு வழிவகுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், Squid Game ஆனது ஸ்ட்ரீமிங் தளத்தில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக தொடர்ந்து தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

விரைவில் ‘ஸ்க்விட் கேம்‘ சீசன் 2
இந்நிலையில், 'ஸ்க்விட் கேம்' இரண்டாவது சீசனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று Netflix தளம் ஒரு சிறிய டீசரை வெளியிடப்பட்டது. மேலும், அந்த வீடியோவில் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நிர்வாக தயாரிப்பாளர் ஹ்வாங் டோங் ஹ்யுக் கதாபாத்திரங்களின் விவரங்களையும் வெளியிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி
அதில், கடந்த ஆண்டு ஸ்க்விட் கேமின் முதல் சீசனை தொடங்க 12 ஆண்டுகள் ஆனது. ஆனால், 'ஸ்க்விட் கேம்' இன்று வரை மிகவும் பிரபலமான நெட்ஃபிக்ஸ் தொடராக மாறியுள்ளது. "ஸ்க்விட் கேம்" திரைப்படத்தின் எழுத்தாளர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர், உலகம் முழுவதும் உள்ள ரசிகர் அனைவருக்கும் மனமார்த்த நன்றி என கூறியுள்ளார். மேலும், இந்த இரண்டாவது சீசனில் கதை கொஞ்சம் கிண்டல் செய்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் வரும் ஹீரோ சியோங் கி-ஹன் (லீ ஜங்-ஜே) மற்றும் முகமூடி அணிந்த எதிரி ஃப்ரண்ட் மேன் (லீ பியுங்-ஹன்) இருவரும் திரும்பி வருவார்கள் என்பதை தெரிவித்துள்ளார்.