என்.ஜி.கே. பற்றி இப்படி ஒரு அப்டேட்டை சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்
Recommended Video

சென்னை: என்.ஜி.கே. படம் பற்றி இப்படி ஒரு அப்டேட் கிடைக்கும் என்று சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் என்.ஜி.கே. படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். செல்வராகவன் எந்த அப்டேட்டும் கொடுப்பதாக தெரியவில்லை.
பரவாயில்லை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவாவது அப்டேட் கொடுப்பார் என்று நம்புகிறார்கள் சூர்யா ரசிகர்கள். இந்நிலையில் தான் பிரபு ஒரு அப்டேட் கொடுத்தார்.
பிரபு
வாக்குறுதி அளித்தப்படி அப்டேட் கொடுக்காததற்கு சாரி. உங்களின் அன்புக்கு நன்றி. ரிலீஸ் நேரத்தில் ஜமாய்த்துவிடுவோம் #NGK #ToAnnaFansWithLove #startmusic என்று எஸ்.ஆர். பிரபு ட்வீட்டியுள்ளார்.

மழுப்பல்
என்.ஜி.கே. படம் ரிலீஸ் நேரம் வந்தால் தான் அப்டேட் வருமாம். அது வரை அப்டேட் இல்லை என்பதை மழுப்பலாக தெரிவித்துள்ளார் பிரபு. இதை பார்த்த பிறகு சூர்யா ரசிகர்களால் எப்படி குணமா அப்டேட் கேட்க முடியும். கோபம் தானே வரும். கே.வி. ஆனந்த் சூர்யாவை வைத்து இயக்கும் படம் குறித்த அப்டேட் எல்லாம் வரும்போது என்.ஜி.கே. பற்றி மட்டும் எதுவும் வருவது இல்லை என்பதே ரசிகர்களின் கோபம்.
செல்வராகவன்
சூர்யா 37 அப்டேட் கொடுங்க என்று கேட்காமலேயே கே.வி. ஆனந்த் குழு கொடுக்கிறது. ஆனால் செல்வராகவன், பிரபுவிடம் கெஞ்சினாலும் அப்டேட் கிடைப்பது இல்லை.
கடுப்பு
நீங்கள் என்.ஜி.கே. அப்டேட் கொடுத்தால் என்ன கொடுக்காவிட்டால் என்ன என்ற மனநிலைக்கு சில ரசிகர்கள் வந்துவிட்டார்கள்.


Click it and Unblock the Notifications











