டிக்டாக் காதலன் சரண்டர்.. டிவி நடிகை தற்கொலை வழக்கில் திடுக் திருப்பம்.. யாரந்த சாய் கிருஷ்ணா?

By

ஐதராபாத்: டிவி சீரியல் நடிகை தற்கொலை விவகாரத்தில் அவரது டிக்டாக் காதலன் சரண்டர் ஆனார். அவர் சொன்ன தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஐதராபாத் மதுரா நகரில் வசித்து வந்தவர் ஸ்ரவாணி கொண்டபள்ளி. தெலுங்கு, டிவி சீரியல் நடிகை.

மனசு மமதா, மௌனராகம் உள்பட பல டிவி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர்.

தூக்குமாட்டி தற்கொலை

தூக்குமாட்டி தற்கொலை

இவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அவர் சகோதரர் சிவா, எஸ்.ஆர்.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை ஸ்ரவாணி குடும்பத்தினர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: ஸ்ரவாணிக்கு தேவராஜ் ரெட்டி என்ற இளைஞருடன் டிக்டாக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆபாச புகைப்படம்

ஆபாச புகைப்படம்

கிழக்கு கோதாவரி மாவட்டம் காக்கிநாடாவை சேர்ந்தவர் தேவராஜ். இருவரும் பழகியுள்ளனர். பின்னர் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார்.
இதை ஸ்ரவாணியிடம் காண்பித்து, தேவராஜ் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறார்.

தொடர்ந்து மிரட்டல்

தொடர்ந்து மிரட்டல்

பணம் கொடுக்கவில்லை என்றால், சமூக வலைதளங்களில் அந்த போட்டோ மற்றும் வீடியோவை பதிவேற்றி விடுவதாகக் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த ஸ்ரவாணி, பயத்தில் முதலில் ரூ.30 ஆயிரமும் பிறகு ரூ.80 ஆயிரமும் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர், தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார்.

வீட்டில் பிரச்னை

வீட்டில் பிரச்னை

இதையடுத்து ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு ஸ்ரவாணி குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆனால், வேறு ஒரு தகவலும் கூறப்பட்டது. ஸ்ரவாணியும் தேவராஜும் காதலித்து வந்துள்ளனர். இது நடிகையின் வீட்டில் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் இந்த காதலை ஏற்கவில்லை. காதலை கைவிடுமாறு கூறியுள்ளனர்.

சரணடைந்தார்

சரணடைந்தார்

கடந்த செவ்வாய்க்கிழமை இரவும் இந்தப் பிரச்னை வீட்டில் வாக்குவாதமாக மாறியது. இதன் காரணமாகவே ஸ்ரவாணி தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் தேடப்பட்டு வந்த தேவராஜ், எஸ்.ஆர்.நகர் போலீசில், நேற்று இரவு சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

நடிகை குடும்ப நண்பர்

நடிகை குடும்ப நண்பர்

அவர், ஸ்ரவாணி எனக்கு கடந்த சில நாட்களுக்கு முன் போன் செய்தார். தனது குடும்பத்தினரும் சாய் கிருஷ்ணா என்பவரும் தன்னை டார்ச்சர் செய்வதாகக் கூறினார். இதை அடுத்தே அவர் தற்கொலை செய்துள்ளார் என்று கூறியுள்ளார். சாய் கிருஷ்ணா, நடிகையின் குடும்ப நண்பர் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த புகாரை சாய் கிருஷ்ணா மறுத்துள்ளார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X