மூன்று காதல்.. டிவி நடிகை தற்கொலை வழக்கில் அடுத்த அதிரடி.. பிரபல தயாரிப்பாளர் திடீர் தலைமறைவு!

By

ஐதராபாத்: சின்னத்திரை நடிகை தற்கொலை விவகாரத்தில் அடுத்த திருப்பம் ஏற்பட்டுள்ளது. சினிமா தயாரிப்பாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

பிரபல் தெலுங்கு சீரியல் நடிகை ஸ்ரவாணி கொண்டபள்ளி, ஐதராபாத் மதுரா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மனசு மமதா, மௌனராகம் உள்பட பல டிவி தொடர்களில் நடித்து பிரபலமடைந்தவர் இவர்.

டிக்டாக் காதல்

டிக்டாக் காதல்

இவர் கடந்த சில நாட்களுக்கு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அவர் குடும்பத்தினர் அளித்த புகாரில், ஸ்ரவாணிக்கு, தேவராஜ் ரெட்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் வெளியிடங்களுக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர். அப்போது தேவராஜ், ஸ்ரவாணியை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டினார்.

காதலை ஏற்கவில்லை

காதலை ஏற்கவில்லை

அதிர்ச்சி அடைந்த அவர், முதலில் ரூ.30 ஆயிரமும் பிறகு ரூ.80 ஆயிரமும் கொடுத்துள்ளார். தொடர்ந்தும் மிரட்டி வந்தார். இதனால் தற்கொலை செய்து கொண்டார்' என்று கூறியிருந்தனர். வேறு ஒரு தகவலும் கூறப்பட்டது. ஸ்ரவாணியும் தேவராஜும் காதலித்து வந்ததாகவும் நடிகையின் வீட்டில் இந்த காதலை கைவிடுமாறு கூறியதாகவும் இதனால் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

டார்ச்சர் செய்தார்

டார்ச்சர் செய்தார்

இந்நிலையில் தேடப்பட்டு வந்த தேவராஜ், சரணடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் ஸ்ரவாணியை அவர் குடும்பத்தினரும் குடும்ப நண்பர் சாய் கிருஷ்ணாவும் டார்ச்சர் செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறினார். சாய் கிருஷ்ணாவிடம் விசாரித்தனர். ஸ்ரவாணியும் சாய் கிருஷ்ணாவும் ஏற்கனவே காதலித்து, பிரிந்தது தெரியவந்தது.

வாக்குவாதம்

வாக்குவாதம்

அடுத்து தேவராஜை, ஸ்ரவாணி காதலிக்கத் தொடங்கினார். தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணி நேரத்துக்கு முன், ஸ்ரவாணியும் தேவராஜும் ரெஸ்டாரென்ட் ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு சாய் கிருஷ்ணாவும் இருந்துள்ளார். அவர், நடிகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அடித்துள்ளார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்துள்ளார் என்று தெரியவந்தது.

தயாரிப்பாளர் அசோக் ரெட்டி

தயாரிப்பாளர் அசோக் ரெட்டி

போலீசார் தேவராஜ், சாய் கிருஷ்ணா இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தெலுங்கு தயாரிப்பாளரும் சம்மந்தப்பட்டுள்ளது இப்போது தெரிய வந்துள்ளது. தெலுங்கில் ஹிட்டான 'ஆர்எக்ஸ் 100' உள்பட சில படங்களை தயாரித்தவர் அசோக் ரெட்டி. இவர் தற்கொலை செய்துகொண்ட நடிகையுடன் பேசும் ஆடியோ சில நாட்களாகப் பரவி வந்தது.

பிரேமதோ கார்த்திக்

பிரேமதோ கார்த்திக்

இதையடுத்து போலீசார் அசோக் ரெட்டிக்கு சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி போலீஸ் அதிகாரி ஶ்ரீனிவாஸ் கூறும்போது, ஸ்ரவாணியும் சாய் கிருஷ்ணாவும் காதலித்து வந்துள்ளனர். பிறகு பிரிந்துவிட்டனர். பின்னர் தேவராஜை காதலித்துள்ளார். இதற்கிடையே அசோக் ரெட்டி தயாரித்த பிரேமதோ கார்த்திக் என்ற படத்தில் ஸ்ரவாணி, சின்ன கேரக்டரில் நடித்தார்.

ஆடியோ பதிவு

ஆடியோ பதிவு

அப்போதிருந்து அசோக் ரெட்டிக்கும் பழக்கம். இந்த மூன்று பேருமே அவரை கல்யாணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர். இதையடுத்தே அவர் தற்கொலை செய்துள்ளார். தனது பெற்றோர், சாய், அசோக் ரெட்டி ஆகியோரால் உடல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக ஸ்ரவாணி, கூறி இருக்கும் ஆடியோ பதிவு கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் அசோக் ரெட்டியை தேடி வருகிறோம்' என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X