சித்தியா?- ஸ்ரீதேவி என் அப்பாவின் மனைவி, அவ்வளவு தான்: நடிகர் அர்ஜுன் கபூர் காட்டம்
மும்பை: நடிகை ஸ்ரீதேவி தனது அப்பா போனி கபூரின் மனைவி அவ்வளவு தான் என்று நடிகர் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் முதல் மனைவி மோனாவின் மகன் அர்ஜுன் கபூர். இந்தி படங்களில் நடித்து வருகிறார்.
அர்ஜுன் கபூரிடம் போனி கபூரின் இரண்டாவது மனைவி ஸ்ரீதேவி பற்றி கேட்டால் மட்டும் பதில் கூற மாட்டார். இந்நிலையில் முதல்முறையாக அவர் ஸ்ரீதேவி பற்றி பேசியுள்ளார்.

அப்பாவின் மனைவி
எனக்கும் ஸ்ரீதேவிக்கும் இடையேயான உறவு எப்போதும் சராசரியானது அல்ல. அவர் என் அப்பாவின் மனைவி அவ்வளவு தான். அதை தாண்டி ஒரு உறவும் இல்லை என்றார் அர்ஜுன்.

ஸ்ரீதேவி
பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த மும்பையில் தங்கிய ஸ்ரீதேவி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகளுடன் இருந்த போனி கபூரை காதலித்து அவரை மணந்தார்.

போனி கபூர்
போனி கபூர் தனது மூத்த மனைவியான மோனாவை 1996ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டு அதே ஆண்டில் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார்.

அர்ஜுன்
மோனாவின் மகன் அர்ஜுனால் ஸ்ரீதேவி தனது தாய்க்கு செய்த கொடுமையை மறக்க முடியவில்லை. அதனால் ஸ்ரீதேவியிடம் இருந்து ஒதுங்கியே இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











