ஏதோ நினைவுகள் கனவுகள் மலருதே.... போட்டோக்களை வெளியிட்ட ஸ்ரீதிவ்யா

சென்னை: ஶ்ரீதிவ்யா இன்ஸ்டாகிராமில் தான் படங்களில் நடித்த போது எடுக்கப்பட்டு வெளியிடாத புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார். அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருப்பவர். தன்னுடைய முக்கியமான செயல்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாமல் பதிவேற்றிடுவார். இன்ஸ்டாகிராமில் தற்போது ஶ்ரீதிவ்யாவுக்கு 10 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

ஶ்ரீதிவ்யா தமிழ் சினிமாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்திலிருந்தே அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்தது. ஶ்ரீதிவ்யா தெலுங்கில் பல படங்களில் நடித்து இருக்கிறார்.

Sri Divya always active on social networks

வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிக பெரிய வெற்றி அடைய அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களை நடிக்க தொடங்கினார். ஜீவா, வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, காஷ்மோரா, மாவீரன் கிட்டு ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். ரெமோ படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் ஶ்ரீதிவ்யா.

ஶ்ரீதிவ்யா இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருப்பவர். தன்னுடைய முக்கியமான செயல்கள் அனைத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாமல் பதிவேற்றிடுவார். இன்ஸ்டாகிராமில் தற்போது ஶ்ரீதிவ்யாவுக்கு 10 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர்.

தற்போது ஶ்ரீதிவ்யா இன்ஸ்டாகிராமில் தான் படங்களில் நடித்த போது எடுக்கப்பட்டு வெளியிடாத புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார்.

Sri Divya always active on social networks

அதில் காக்கி சட்டை படத்தில் காதல் கண்கட்டுதே பாடலுக்காக நார்வே நாட்டுக்கு சென்றிருந்த போது எடுத்த புகைபடங்களை வெளியிட்டு இருக்கிறார்.

மேலும் பெங்களூர் நாட்கள் படத்தின் போது படக்குழுவுடனும், ஆர்யா மற்றும் ராணா டகுபதியுடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அந்த படம் மலையாளத்தில் வெளியான பெங்களூர் டேஸ் படத்தின் ரீமேக் ஆகும்.

அதோடு, பென்சில் பட போட்டோ சூட்டின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவேற்றியிருக்கிறார். பென்சில் படம் தான் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு அறிமுக படம். ஆனால் சில பிரச்சனைகளால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட, அவரின் டார்லிங் படம் முதலில் ரிலீஸானது.

ஶ்ரீதிவ்யா தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஒத்தைக்கு ஒத்தை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு விஜய் ஆன்டனி-விஜய் மில்டன் இணையப்போகும் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்திலும் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X