முதல்முறையாக.. பிரபல ஹீரோ ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமாகிறார், நம்ம லதா பாண்டி!
சென்னை: தமிழ், தெலுங்கில் நடித்துள்ள ஶ்ரீதிவ்யா, முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகிறார்.
தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடக்கத் தொடங்கியவர் ஶ்ரீதிவ்யா. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.
இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஶ்ரீதிவ்யா கவனிக்கப்பட்டார்.

காக்கிச்சட்டை
இந்தப் படத்தில் லதா பாண்டி என்ற பள்ளி மாணவி கேரக்டரில் நடித்திருந்தார். டி.இமான் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டானதால், ஶ்ரீதிவ்யா பிரபலமானார். அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். இதையடுத்து, காக்கிச்சட்டை, காஷ்மோரா, ஜீவா, ஈட்டி, மருது உட்பட பல படங்களில் நடித்தார்.

சங்கிலி புங்கிலி
தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த ஶ்ரீதிவ்யாவுக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக ஜீவா, சூரி நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்திருந்தார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கவுதம் கார்த்திக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

விஜய் ஆண்டனி
இதை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இதற்கிடையே, அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த மற்றும் விஜய் ஆண்டனியுடன் ஒரு படத்தில் நடிக்கும் ஶ்ரீதிவ்யா, அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாயின.

மலையாள அறிமுகம்
இந்நிலையில் அவர் முதன்முறையாக மலையாளத்தில் அறிமுகமாகிறார். பிருத்விராஜ் ஹீரோவாக நடிக்கும் ஜனகணமன படத்தில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்குகிறார். டிரைவிங் லைசன்ஸ் படத்துக்குப் பிறகு இதில் பிருத்விராஜும் சுராஜ் வெஞ்சரமூடும் இணைந்து நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











