விஜய்னா சும்மாவா? இலங்கை நாமல் ராஜபக்ஷவிடம் இருந்து வந்த செய்தி!
சென்னை: ஜன நாயகன் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சனிக்கிழமை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மலேசியாவே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு நடந்த இந்த விழா 'Malaysian Book of Records'ல் இடம்பிடித்தது ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையை திரும்பி இந்த விழாவின் மூலம் விஜய்க்கு ஒரு சர்வதேச அரசியல் பிரமுகர் ஒருவரிடம் இருந்து வாழ்த்து செய்தி பறந்து வந்துள்ளது.
விஜய்யின் கடைசிப்படம் என்று அறிவிக்கப்பட்ட 'ஜன நாயகன்' திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக உள்ளது. எச். வினோத் இயக்கிய இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பிரியாமணி, பாபி தியோல் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 45 ஆண்டுகால வெற்றிகரமான சினிமா வாழ்க்கைக்குப் பிறகு விஜய்யின் கடைசிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் உள்ளது.

ஜன நாயகன் விஜய் பேச்சு: இந்த பரபரப்புகளுக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக, 'ஜன நாயகன்' திரைப்படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு விழா டிசம்பர் 27 ஆம் தேதி மலேசியாவில் நடைபெற்றது. ரசிகர்களின் ஆதரவுடன் ஒரு பிரம்மாண்டமான நிகழ்வில் விஜய் கலந்துகொண்டது, அவருக்கு எவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் விஜய் தொடர்ந்து நடிக்க வேண்டும் என அன்பு வேண்டுகோள்வைத்தனர். கடைசியாக பேசிய விஜய், கடந்த 30 வருடங்களாக எனது பயணத்தில் ரசிகர்கள் உடன் இருந்தார்கள். அடுத்த 30 வருடத்திற்கு நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் என்று மீண்டும் ஒரு முறை சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.
சர்வதேச வாழ்த்து: இந்நிலையில், முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், ஒரு முக்கிய அரசியல்வாதியுமான நாமல் ராஜபக்ஷ, நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், சினிமாவில் விஜய்யின் திறமை என்ன என்று அனைவருக்கும் தெரியும். அவர் இப்போது சினிமாவில் தனது வாழ்க்கையின் ஒரு அத்தியாயத்தை முடித்துக்கொண்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்க முடிவு செய்து இருக்கிறார். "சினிமா அவரை இழக்கும்," விஜய்யின் புதிய அரசியல் வாழ்க்கையில் அவர் வெற்றிபெற வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார். ஒரு சர்வதேச அரசியல் பிரமுகரிடம் இருந்து வந்துள்ள இந்த பதிவு இணையத்தில் உடனடியாக வைரலானது. நாமல் ராஜபக்ஷ முன் வந்து அவரை வாழ்த்தி இருப்பது, தமிழ்நாட்டிற்கு அப்பால் தொலைதூரங்களில் உள்ளவர்களாலும் விஜய்யின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன என்பதேயே காட்டுகிறது.


Click it and Unblock the Notifications











