»   »  மெட்ராஸ் கஃபே படத்தை எடுக்க ராஜபக்சே ரகசியமாக பணம் கொடுத்தாரா?: ஜான் ஆபிரகாம்

மெட்ராஸ் கஃபே படத்தை எடுக்க ராஜபக்சே ரகசியமாக பணம் கொடுத்தாரா?: ஜான் ஆபிரகாம்

By Siva
Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை பிரச்சனையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள மெட்ராஸ் கஃபே படத்தை எடுக்க இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ரகசியமாக பணம் கொடுக்கவில்லை என்று ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

1990களில் இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையேயான மோதல் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தி படம் மெட்ராஸ் கஃபே. ஷூஜித் சர்கார் இயக்கியுள்ள இப்படத்தில் ஜான் ஆபிரகாம், நர்கிஸ் ஃபக்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் கஃபே இந்தி தவிர தமிழிலும் வரும் 23ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

தடை விதிக்க வேண்டும்

தடை விதிக்க வேண்டும்

மெட்ராஸ் கஃபே படத்தில் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளனர் என்று கூறி நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

ராஜபக்சே

ராஜபக்சே

மெட்ராஸ் கஃபே படத்தை எடுக்க இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசியமாக பண உதவி செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை ஜான் ஆபிரகாம் மறுத்துள்ளார்.

தயாரிப்பு

தயாரிப்பு

தான் நடித்துள்ள படத்தை வியகாம் 18 மோஷன் பிக்சர்ஸை தவிர வேறு யாரும் தயாரிக்கவில்லை என்று ஜான் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்

பட்ஜெட்

நாங்கள் குறைவான பட்ஜெட்டில் படத்தை எடுத்துள்ளோம். பட்ஜெட்டை அதிகரிக்கவில்லை. கதையை சொல்வது தான் எங்கள் நோக்கம். நாங்கள் அதில் தான் கவனம் செலுத்தி உள்ளோம் என்றார் ஜான் ஆபிரகாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Refuting rumours that Sri Lankan president Mahinda Rajapakse secretly invested in upcoming political spy-thriller Madras Cafe, John Abraham Monday said that this wasnt true.
 "Its not true that Rajapakse secretly financed my film. Viacom 18 Motion Pictures is the producer of my film. They would feel bad about these rumours and therefore Im clarifying again that it has not been secretly financed by anyone other than my producers," John told reporters here.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more