பிக் பாஸ் 2 சீசன் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்: காரணம் 2 வில்லங்க போட்டியாளர்கள்
Recommended Video

ஹைதராபாத்: தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் என்பது தற்போதே தெரிந்துவிட்டது.
தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் சீசனை நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கினார். இந்நிலையில் இரண்டாவது சீசன் வரும் 10ம் தேதி துவங்குகிறது.
இந்த சீசனை நடிகர் நானி தொகுத்து வழங்குகிறார்.

நானி
நானி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார், யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. ஹீரோ ராஜ் தருண், பாடகி கீதா மாதுரி, சியாமலா, லஸ்யா, ராஷி, சார்மி கவுர், தன்யா பாலகிருஷ்ணா, ஜூனியர் ஸ்ரீதேவி, கஜாலா, சாந்தினி சவுத்ரி, ஸ்ரீ ரெட்டி, வருண் சந்தேஷ், தனிஷ், விவா ஹர்ஷா, வேணு, ஆர்யன் ராஜேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

ஸ்ரீ ரெட்டி
ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டதுடன் நடுத்தெருவில் ஆடையை அவிழ்த்து போராடிய ஸ்ரீ ரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

விவா ஹர்ஷா
ஸ்ரீலீக்ஸின் ஒரு பகுதியாக நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா தன்னுடன் வாட்ஸ்ஆப்பில் ஆபாசமாக சாட் செய்த விபரத்தை வெளியிட்டார் ஸ்ரீ ரெட்டி. அந்த விவா ஹர்ஷாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

எதிர்பார்ப்பு
பிக் பாஸ் வீட்டில் விவா ஹர்ஷாவும், ஸ்ரீ ரெட்டியும் மல்லுக்கட்டக் கூடும் அதனால் டிஆர்பி கண்டமேனிக்கு எகிறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு
ஸ்ரீ ரெட்டியை பிக் பாஸ் வீட்டில் விட்டால் கெட்ட வார்த்தைகள் பேசுவதுடன், அரை நிர்வாண போராட்டம் நடத்தினாலும் நடத்துவார். அதனால் அவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைக்க மாட்டார்கள் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











