நள்ளிரவில் தாக்கினார், 'ஆடி' காரை அபகரிக்கப் பார்க்கிறார்: பைனான்சியர் மீது ஸ்ரீரெட்டி புகார்

By Siva

சென்னை: நள்ளிரவில் வீடு புகுந்து பைனான்சியர் சுப்பிரமணி தன்னை தாக்கியதாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பலர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் தங்கி தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் வெளியிட்டு வருகிறார்.

நேரம் கிடைக்கும்போது எல்லாம் யாராவது ஒரு பிரபலம் மீது பாலியல் புகார் கூறுகிறார். தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை தான் அடிக்கடி விளாசிக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டி தற்போது ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி இரவு 11 மணிக்கு வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீரெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சுப்பிரமணி தனது ஆடையை பிடித்து இழுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சுப்பிரமணி

சுப்பிரமணி

ரெட்டி டைரி படத்தின் தயாரிப்பாளருக்கும், பைனான்சியர் சுப்பிரமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட நான் தான் காரணம் என்று நினைத்து சுப்பிரமணி என்னை தாக்கியுள்ளார் என்கிறார் ஸ்ரீரெட்டி.

ஆடி கார்

ஆடி கார்

சுப்பிரமணி என் ஆடி காரை அபகரிக்க முயல்கிறார். மேலும் என்னை அடைய நினைக்கிறார். அவரால் உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளாகி அது குறித்து தெலுங்கானா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்தேன் என்று ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆடி கார்

ஆடி கார்

தமிழ் சினிமாவில் அடி எடுத்து வைத்த உடன் பங்களாவில் வசிக்கிறார் ஸ்ரீரெட்டி. இந்நிலையில் அவரிடம் ஆடி கார் இருப்பது குறித்து அறிந்து அது எப்படி கிடைத்தது என்று கோலிவுட்டில் பேசத் துவங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X