ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்துவிட்டார்: நடிகர் நானி மீது ஸ்ரீ ரெட்டி பகீர் புகார் #Srileaks
Recommended Video

ஹைதராபாத்: நடிகர் நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து நரகத்தை காட்டியதாக நடிகை ஸ்ரீ ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி. தன்னை படுக்கைக்கு அழைத்த சில பெரிய ஆட்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நானி மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

பெண்
நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து நரகம் என்றால் என்னவென்பதை ஒரு நாள் முழுவதும் காட்டியதாக ஸ்ரீ ரெட்டி பகீர் புகார் தெரிவித்துள்ளார்.

வெட்கம்
நானி உங்களுக்கு குடும்பம் இருக்கிறது. உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என்று ஸ்ரீ ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்ரீ ரெட்டியின் புகாரால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிசுகிசு
எந்த நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாதவர் நானி. நடிப்புக்காக மட்டுமே பேசப்பட்டு வரும் நானி மீது ஸ்ரீ ரெட்டி இப்படி புகார் தெரிவித்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

ஜீவிதா
முன்னதாக தனது கணவர் மற்றும் தன் மீது புகார் தெரிவித்த ஸ்ரீ ரெட்டி மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளார் நடிகை ஜீவிதா. நானியும் அப்படி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











