பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்

By Siva

Recommended Video

படுக்கைக்கு அழைத்தார் சுந்தர் சி : ஸ்ரீ ரெட்டி புகார்- வீடியோ

சென்னை: நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது.

வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளார்.

 ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

 ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளரான கணேஷ் என்பவர் எனக்கு போன் செய்தார். யார் மூலமாகவோ என் நம்பரை வாங்கி எனக்கு போன் செய்தார். நான் ஷூட்டிங்ஸ்பாட்டிற்கு சென்றபோது அவர் என்னை சுந்தர் சி.யிடம் அறிமுகம் செய்து வைத்தார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.

 சந்திப்பு

சந்திப்பு

ஃபேஸ்புக் நண்பர் செந்தில்குமாரையும்(கேமராமேன்) சந்தித்தேன். அடுத்த படத்தில் நீங்களும் ஒரு ஹீரோயின் என்று எனக்கு அவர் வாக்குறுதி அளித்தார். மறுநாள் போன் செய்து நோவோடெல் ஹோட்டலுக்கு வரச் சொன்னார்.

அட்ஜஸ்ட்

படத்தில் வாய்ப்பு வேண்டுமானால் அவர்(கணேஷ்) மற்றும் சுந்தர் சி.யுடன் அட்ஜஸ்ட்(பாலியல் ரீதியாக) செய்ய வேண்டும் என்றனர். அதன் பிறகு நடந்தது பெருமாளுக்கு தெரியும்... கணேஷ் ஒரு பிராடு, அவர் எனக்கு உதவி செய்யவில்லை என்று ஸ்ரீ ரெட்டி ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார். #tamilleAks

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளது குறித்து நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X