உங்களுக்கு கொரோனா வரலையா.. மீண்டும் பவன் கல்யாணை வம்பிழுக்கும் ஸ்ரீரெட்டி.. மோசமா பேசுறாங்களே!
சென்னை: நடிகர் பவன் கல்யாணை மீண்டும் வம்பிழுத்துள்ளார் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி.
நடிகை ஸ்ரீரெட்டி என்றதும் நினைவுக்கு வருவது அவரது அரை நிர்வாண போராட்டமும் அவர் கூறிய குற்றச்சாட்டுக்களும் தான். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பலரும் தன்னை பயன்படுத்திக் கொண்டதாக கூறினார்.
சில இயக்குநர்கள் தனக்கு சாப்பாடு கூட் வாங்கித் தரமால் தன்னிடம் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் சினிமா பிரபலங்கள் மீது அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.

புகார்
நடிகர் விஷால் மீது தரக்குறைவான குற்றச்சாட்டுக்களை கூறி அவரது திருமணத்திற்கே வேட்டு வைத்து விட்டார் ஸ்ரீரெட்டி. தொடர்ந்து சன் டிவி சீரியல் பிரபலங்கள் மீது போலீஸில் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். நடிகைகளை கூட விட்டு வைக்காமல் மோதலில் ஈடுபட்டு வருகிறார்.

ஸ்ரீரெட்டி மீது புகார்
தெலுங்கு துணை நடிகையான கராத்தே கல்யாணி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராக்கேஷ் ஆகியோர் ஸ்ரீரெட்டி தங்களை அவதூறாக பேசுவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் குறித்தும் தரக்குறைவாக கருத்துக்களை பதிவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி.

பெண்களை ஏமாற்றி
இதேபோல் தெலுங்கு நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பவன் கல்யாணையும் அடிக்கடி தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் ஸ்ரீரெட்டி, நடிகர் பவன் கல்யாண் பல பெண்களை திருமணம் செய்துக் கொண்டது தான் அவரது ஒரே சாதனை, மற்றவரை ஏமாற்றுவதுதான் இவரத பலம் என்று கூறி மிரள விட்டார்.

ஃபாரின் சிக்
இந்நிலையில் நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை வைத்தும் பவன் கல்யாணை வம்பிழுத்துள்ளார். இதுதொடர்பாக தனது ஃபேஸ்புக் பதிவில் பவன் வீட்டில் ஃபாரின் சிக்கை வைத்திருக்கிறார்? அவருக்கு கொரோனா வரவில்லையா என கேட்டுள்ளார்.

கவர்ச்சியான பெண்
சிக் என்பதற்கு கோழிக்குஞ்சு என்ற அர்த்தமும் உண்டு, அதே சமயம் கவர்ச்சியான இளம் பெண் அல்லது பெண்ணை கொச்சயாக அழைக்கும் சொல்லாகவும் சிக் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. நேற்று ஸ்ரீரெட்டி பதிவிட்ட தனது பதிவில், அதிர்ஷ்டவசமாக நான் எனக்கு ஃபாரின் பாய் பிரன்டு இல்லை, நான் கொரோனாவில் இருந்து தப்பித்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.

மாற்றிக்கொள்ளுங்கள்
இந்நிலையில் ஸ்ரீரெட்டி பவன் கல்யாண் குறித்து கூறியிருப்பது பெண்ணை குறிப்பபிட்டுதான் என தெரிகிறது. ஸ்ரீரெட்டியின் இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், மற்றவர்களை பற்றி சோஷியல் மீடியாவில் கமென்ட் பதிவிடாதீர்கள். மற்றவர்களுடன் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் மோதல் இருந்தால் தனிப்பட்ட முறையில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மனுஷியாக உங்களுடைய ஆட்டியூடை மாற்றிக் கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications