சமந்தாவை ஸ்டேஜில் அப்படி கட்டிப்புடிச்சு தூக்கி சுற்றிய விஜய் தேவரகொண்டா.. காண்டான ஸ்ரீரெட்டி!
சென்னை: சினிமாவில் இருந்து நடிகை சமந்தா ஒரு வருஷத்துக்கு ஓய்வில் இருப்பார் என தகவல்கள் வெளியாகின. பின்னர், பாலி தீவுக்கு சென்று தோழியுடன் ஜாலி செய்து வந்த போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வந்த சமந்தா உடல்நலம் சரியில்லாத நிலையிலும், தனது புதிய படமான குஷி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டார்.
அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை சமந்தாவை அலேக்காக விஜய் தேவரகொண்டா தூக்கி சுற்றிய வீடியோ காட்சிகளும் சமந்தாவுடன் படு நெருக்கமாக கட்டி அணைத்துக் கொண்டு விஜய் தேவரகொண்டா இருக்கும் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவும் படு நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து போட்டுள்ள கமெண்ட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
குஷியில் சமந்தா: குஷி என்றதுமே விஜய் ஜோதிகா நடித்த குஷி படம் தான் ரசிகர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். ஆனால், இனிமேல் குஷி என்றதுமே விஜய் தேவரகொண்டா சமந்தா நடிப்பில் வரும் செப்டம்பர் 1ம் தேதி வெளியாக உள்ள இந்த குஷி படம் தான் நினைவுக்கு வரும் என்கிற அளவுக்கு சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் ப்ரமோஷனிலேயே அந்தளவுக்கு ரொமான்ஸ் செய்துள்ளனர்.
நடிகையர் திலகம் படத்திலேயே: ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் சாவித்ரியின் பயோபிக் படத்தில் நடித்த போதே விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்த நிலையில், இந்த படத்தில் மீண்டும் இருவரும் ஜோடி போட்டு நடித்துள்ளனர்.
சமந்தாவை அலேக்காக தூக்கி: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா சிகிச்சை பெற்று வரும் நிலையில், குஷி படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது, பாடல் செட் அமைக்கப்பட்டு இருவரும் நடனம் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்தினர். அப்போது மேடையிலேயே அந்த பாடலுக்கு நடனம் ஆடும் போது விஜய் தேவரகொண்டா சமந்தாவை தூக்கி சுற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

காண்டான ஸ்ரீரெட்டி: தெலுங்கு நடிகர்கள் மற்றும் கோலிவுட் நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தனர் என ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு சர்ச்சையை கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி சமந்தா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் இந்த நெருக்கமான போட்டோவை பதிவிட்டு இதற்கு கேப்ஷன் போடுங்க என ட்வீட் போட்டுள்ளார். அவரது கமெண்ட் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகாவுக்கு விஜய் தேவரகொண்டா துரோகம் செய்து விட்டார் என்றும் சமந்தா விஜய் தேவரகொண்டா ஜோடி பொருத்தம் சூப்பர் என்றும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











